»   »  ஜூன் 12-ம் தேதி கபாலி இசை வெளியீடு... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு!

ஜூன் 12-ம் தேதி கபாலி இசை வெளியீடு... அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரசிகர்கள் மட்டுமல்ல, திரையுலகினரும் கூட ஆர்வத்துடன் எதிர்ப்பார்த்திருக்கும் ரஜினியின் கபாலி பட இசை வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.

வரும் ஜூன் 12ம் தேதி சென்னையில் கபாலி பட இசை வெளியீடு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடக்கும் இடம் பின்னர் தெரிவிக்கப்படும்.


Kabali audio from June 12

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழி திரையுலகிலிருந்து பலரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.


சரியாக 38 ஆண்டுகளுக்கு முன் இதே ஜூன் மாதம்தான் ரஜினி நடித்த பைரவி படத்தை, 'சூப்பர் ஸ்டார்' அடை மொழி கொடுத்து வெளியிட்டார் தாணு. இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் இருவரும் இணைந்து படம் தயாரிக்கும் வாய்ப்பு இருந்தும் நடக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கபாலி வடிவில் நிறைவேறியிருக்கிறது.


படத்தின் வியாபாரம் மற்றும் விநியோகத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வரும் தாணு, இப்போது இசை வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளார். ஜூலை 1-ம் தேதி படம் வெளியாகும் என்கிறார்கள். ஆனால் முஸ்லீம்களின் ரம்ஜான் நோன்பை கருத்தில் கொண்டு ஜூலை 7-ம் தேதி படத்தை வெளியிடுவார் எனத் தெரிகிறது.

English summary
Kalaipuli Thanu announced that the audio launch of Rajini's Kabali will be held on June 12th in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil