»   »  கபாலி ஆடியோ ரிலீஸ் எப்போது?

கபாலி ஆடியோ ரிலீஸ் எப்போது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்துள்ளனர்.

கபாலி டீசர் 2 கோடி பார்வைகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை எப்படி இருக்கும் என்கிற ஆவல் அனைவருக்குமே உள்ளது.


இசை வெளியீடு

இசை வெளியீடு

இந்த மே மாதம் கடைசி வாரத்தில் படத்தின் பாடல்களை வெளியிட்டு விடுவோம் என்றுதான் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறியிருந்தார். இப்போது ஜூன் முதல் வாரத்துக்கு இசை வெளியீட்டைத் தள்ளி வைத்துள்ளார்களாம்.


சென்னையில்

சென்னையில்

ஆரம்பத்தில் மலேசியாவில் இசை வெளியீட்டை நடத்தப் போவதாகக் கூறியிருந்தார் தாணு. இப்போது ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சென்னையிலேயே நடத்தும் முடிவிலிருக்கிறாராம்.இன்னொரு ட்ரைலர்

இன்னொரு ட்ரைலர்

படத்துக்கு இன்னொரு ட்ரைலர் வெளியிடலாமா என்ற யோசனையும் உள்ளதாம். ஆனால் ரசிகர்களோ, இன்னொரு ட்ரைலர் வேண்டாம். நேரடியாக படத்தை வெளியிடுங்கள் என்று கோரி வருகின்றனர்.


ஜூலை 6-க்குப் பிறகு

ஜூலை 6-க்குப் பிறகு

கபாலியின் வெளியீட்டுத் தேதியிலும் மாற்றம் செய்யக் கோரி வருகின்றனர். ஜூலை 1-ம் தேதி படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார் தாணு. ஆனால் ஜூலை 6-க்குப் பிறகு வெளியிடுமாறும், அப்போதுதான் நோன்பு முடிந்து முஸ்லிம் மக்களும் படம் பார்க்க வசதியாக இருக்கும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர் ரசிகர்கள்.


English summary
Rajinikanth's Kabali audio launch will be held in Chennai on Jusne 1st week.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil