»   »  இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் முறியடித்த கபாலி இசை!- திங்க் மியூசிக்

இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் முறியடித்த கபாலி இசை!- திங்க் மியூசிக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் இசை இந்திய சினிமாவின் அத்தனை சாதனைகளையும் முறியடித்துள்ளது. குறிப்பாக டிஜிட்டல் வடிவில் பெரும் சாதனை நிகழ்த்தியுள்ளதாக திங்க் மியூசிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ஸ்வரூப் ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:


இசை இங்கு நல்ல இசை , மிகச்சிறந்த இசை மற்றும் சூப்பர் ஸ்டாரின் இசை என்று மூன்று வகைப்படும்.


22 மில்லியன் பேர் கண்டு ரசித்து சாதனை படைத்த கபாலி டீசருக்கு பின் கபாலி திரைப்படத்தின் இசைக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எகிறித்தான் இருந்தது.


ஜூன் 11 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த கபாலி, இதுவரை இல்லாத மாபெரும் சாதனையை படைத்தது என்றுதான் கூற வேண்டும். கபாலியின் பாடல்களை இந்த உலகமே கொண்டாடியது நாம் அறிந்த உண்மை.


சூப்பர் ஸ்டார் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி

சூப்பர் ஸ்டார் - சந்தோஷ் நாராயணன் கூட்டணி

கபாலி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களால் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது. கபாலி எனும் ப்ளாக்பஸ்டர் ஆல்பத்தின் மூலம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சூப்பர் ஸ்டார் அவர்களின் ரசிகர்களை ஆட்கொண்டுள்ளார் என்றே கூறவேண்டும். அந்த அளவுக்கு கபாலி திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் அனைத்து தரப்பினரும் மீண்டும் மீண்டும் விரும்பி கேட்கும் பாடல்களாக அமைந்துள்ளது.


நெருப்புடா

நெருப்புடா

வெளியாகிய ஒரு வாரத்திலேயே கபாலி திரைப்படத்தின் பாடல்கள் சமூக வலைதளத்தில் இது வரை நிகழ்த்தப்பட்ட அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. இது வரை யூட்யுபில் நிகழ்த்தப்படாத சாதனை கபாலி ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள " நெருப்பு டா " பாடலை நான்கு மில்லியன் பேர் பார்த்ததுதான். இது மட்டுமல்லாமல் பாடல்கள் கானா, விங்க், ஹங்காமா என அனைத்திலும் ஹிட் அடித்துள்ளது. ஐ ட்யூன்ஸ் இந்திய, சிங்கபூர், அர்மேனியா , மலேசியா, ஸ்ரீ லங்காவில் அதிகம் விற்பனையாகும் பாடல்களில் நம்பர் ஒன் இடத்தை "கபாலி" பிடித்துள்ளது.


சமூக வலைத் தளங்களில்

சமூக வலைத் தளங்களில்

இது மட்டுமல்லாது பாடல்கள் ட்விட்டர் , பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. எந்திரன் படத்தின் பாடல் வெளியீட்க்கு பின்னர் திங் மியூசிக் நிறுவனத்துக்கு மிகப் பெரிய ஆல்பம் என்றால் அது கபாலி தான். கபாலி ஆல்பம் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடன் திங் மியூசிக்கிற்கு 10ஆவது ஆல்பம். இயக்குநர் பா. ரஞ்சித்துடன் 3ஆவது ஆல்பமாகும். கபாலி வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ்.தாணு அவர்களுடன் திங் மியூசிக் பெருமையுடன் இணையும் 3ஆவது ஆல்பம். மிகப்பெரிய திறமைசாலிகளான சந்தோஷ் நாராயணன், பா.ரஞ்சித், பாடகர்கள், பாடலாசிரியர்கள் இந்த ப்ளாக் பஸ்டர் ஆல்பத்தில் இணைந்துள்ளது இதன் தனி சிறப்பு.


ரஜினி திருவிழா

ரஜினி திருவிழா

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள் நடித்துள்ள திரைப்படம் வெளியாகிறது என்றாலே அது திருவிழா தான். அதற்க்கு நிகராக வேறு எதுவுமே இருக்க முடியாது. நாங்கள் இப்படைப்போடு இணைந்திருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் திங் மியூசிக் ஸ்வரூப் ரெட்டி.


அடுத்த டீசர்

இன்னும் சில வாரங்களில் கபாலி திரைப்படம் வெளியாகவுள்ளது. அதற்குள் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக கபாலி திரைப்படத்தின் இன்னொரு பாடல் டீசர் வரும் வாரத்தில் வெளியாகவுள்ளது.


English summary
Think Music, the audio rights owners of Kabali has claimed that the album has created a new record in the history of Indian Film music.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil