»   »  கபாலி பாடல்கள்... மில்லியனில் பார்வைகள்... கோடிகளில் வருமானம்!

கபாலி பாடல்கள்... மில்லியனில் பார்வைகள்... கோடிகளில் வருமானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி பாடல்கள் மூலம் பல வழிகளிலும் அதன் வெளியீட்டு உரிமை பெற்றுள்ள திங்க் மியூசிக் நிறுவனம் வருமானம் ஈட்டி வருகிறது.

கபாலி பாடல்கள் கடந்த ஜூன் 12-ம் தேதி இணையத்தில் வெளியாகின. அன்றே படத்தின் சிடிக்கள் விற்பனைக்கும் கிடைத்தன.

ஐட்யூன்ஸ் மூலமும் பாடல்கள் கேட்கக் கிடைத்தன. இந்தப் பாடல்களை பாடல் வரிகளுடன் வீடியோவாக யுட்யூபில் வெளியிட்டிருந்தனர்.

Kabali songs minting crores of money

பாடல்களை திரும்பத் திரும்ப பல லட்சம் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இதனால் யுட்யூபில் கபாலி பாடல்களில் நெருப்புடா மற்றும் உலகம் ஒருவனுக்கா ஆகிய படங்களை ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்துள்ளனர். மற்ற மூன்று பாடல்களும் விரைவில் ஒரு மில்லியன் பார்வைகளைத் தொடவிருக்கிறது.

இதற்கு முன் பல படங்களின் பாடல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தாலும் சில ஆயிரங்கள் அல்லது லட்சங்களில்தான் பார்த்திருந்தார்கள். கபாலிதான் மில்லியனைத் தாண்டிக் கொண்டிருக்கிறது. இதில் ஒளிபரப்பாகும் விளம்பரங்கள் மூலம் டாலரில் கொட்டுகிறது பணம்.

அதேபோல ஐட்யூனில் பல லட்சம் பேர் கபாலி பாடல்களை பணம் கொடுத்து தரவிறக்கம் செய்துள்ளனர்.

நேரடியாக சிடி மூலம் வாங்கியவர்கள் எண்ணிக்கை 25 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவற்றைத் தாண்டி கபாலி ரிங்டோன்களை அனைத்து செல்போன் சேவை தரும் நிறுவனங்களும் வழங்கி வருகின்றன.

இந்த அனைத்து வழிகளிலும் திங் மியூசிக் நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் வருமானமாகக் குவிந்து வருகிறது.

இன்றைக்கு ஒரு படத்தின் வியாபாரமே கேள்விக்குறியாக இருக்கும் சூழலில், கபாலியின் இசை மூலம் மட்டுமே கோடிகளில் வருமானம் குவிவது ரஜினி படத்தில் மட்டுமே சாத்தியம் என்கிறது கோடம்பாக்க பாக்ஸ் ஆபீஸ்!

English summary
Rajinikanth's Santhosh Narayanan musical Kabali songs minting money through various channels like youtube, itunes, caller tunes and audio CDs.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil