»   »  பல இயக்குநர்கள், நடிகர்கள் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா!- கமல் ஹாஸன்

பல இயக்குநர்கள், நடிகர்கள் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா!- கமல் ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பல இளம் இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் வெற்றிக்கு வழிவகுத்தவர் இளையராஜா என ஓய் இசைவெளியீட்டில் கமல்ஹாசன் புகழாரம் சூட்டினார்.

மார்க் ஸ்டுடியோ இந்தியா பிரைவேட் லிமிடட் தயாரிப்பில் ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கத்தில் இசைஞானி இளையராஜாவின் இசையில், கீதன் பிரிட்டோ, ஈஷா நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'ஓய்'.

Kamal Hassan hails Ilaiyaraaja

இப்படத்தின் இசை வெளியீடு மிகவும் எளிமையாக நடைப்பெற்றது. நடிகர் கமல்ஹாசன் வெளியிட இசைஞானி இளையராஜா பெற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கமல் ஹாஸன், "தன் வசகர இசையால் பல இளம் இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் கனவு படங்களுக்கு வெற்றியை அடித்தளமாக அமைத்தவர் இளையராஜா.

Kamal Hassan hails Ilaiyaraaja

16 வயதினிலே உள்ளிட்ட பல படங்கள் அதற்கு சான்று. இன்று ஃப்ரான்சிஸ் மார்கஸ் இயக்கும் ஓய் படத்திற்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படமும் வெற்றிப் பெற்று சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள்," என கமல்ஹாசன் கூறினார்.

English summary
Kamal Hassan says that Composer Ilaiyaraaja has paved way to the success of many directors and actors.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil