»   »  தெற்கு தேச சிங்கமடா... முத்துராமலிங்கம் படத்தில் இளையராஜா இசையில் கமல் பாடிய பாடல்!

தெற்கு தேச சிங்கமடா... முத்துராமலிங்கம் படத்தில் இளையராஜா இசையில் கமல் பாடிய பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் முத்துராமலிங்கம் படத்தில் இளையராஜா இசையில் நடிகர் கமல் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரிக்கும் புதிய படம் முத்துராமலிங்கம். ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்தில் கார்த்திக் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


Kamal lends his voice for Gautham Karthick

இந்நிலையில் இப்படத்தில், ‘தெற்கு தேச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும் பொன் தங்கமடா' என்ற பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ளார். இப்பாடலினை கமல் பாடியுள்ளார்.


21 ஆண்டுகளுக்குப்பிறகு பஞ்சு அருணாச்சலம் வரிகளுக்கு இளையராஜா இசை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்த படத்தில் கவுதம் கார்த்திக்கிற்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா உள்பட பலர் நடிக்கிறார்கள்.

English summary
Ulaganayagan kamalhaasan lends his voice for Gautham Karthik's upcoming tamil movie Muthuramalinga in Ilayaraja's Music.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil