»   »  உழைப்பாளர்களின் பெருமை பேசும் 'வேலைக்காரன்' பாடல் - ஆட்டம்போடவைக்கும் அனிருத்!

உழைப்பாளர்களின் பெருமை பேசும் 'வேலைக்காரன்' பாடல் - ஆட்டம்போடவைக்கும் அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'வேலைக்காரன்' படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், ஃபகத் ஃபாஸில், ஸ்நேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, யோகி பாபு, சதீஷ், விஜய் வசந்த் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

'24 ஏஎம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா மிகப் பிரம்மாண்டமாக இப்படத்தைத் தயாரித்து வருகிறார். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஏற்கனவே, படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனமும், சேட்டிலைட் உரிமையை விஜய் டி.வியும் கைப்பற்றியது.

'Karuthavanlaam galeejaam' lyrical video released from Velaikkaran movie

சமீபத்தில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன் ராஜாவும், செகண்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸரை சிவகார்த்திகேயனும் வெளியிட்டனர். போஸ்டர்கள் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது.

'Karuthavanlaam galeejaam' lyrical video released from Velaikkaran movie

இந்நிலையில், படத்தில் இடம்பெறும் 'கருத்தவன்லாம் கலீஜாம்' எனும் சிங்கிள் டிராக்கை அனிருத் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த குத்துப் பாடல் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.

நேற்றே அறிவித்தபடி, 'கருத்தவன்லாம் கலீஜாம்...' பாடலின் லிரிக்கல் வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியானது. உழைப்பாளர்களின் பெருமை பேசும் இந்தப் பாடல் விவேகாவின் வரிகளில் உருவாகியிருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் அனிருத்தே பாடியிருக்கிறார்.
படத்தை வருகிற செப்டெம்பர் 29-ஆம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாம் 'வேலைக்காரன்' டீம்.

English summary
Karuthavanlaam galeejaam from 'Velaikkaran' lyrical video was released officially. Anirudh composed this song with his own voice.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil