விஜய் சேதுபதியின் லாபம்... ஸ்ருதிஹாசன் குரலில் வெளியான யாழா யாழா பாடல்
சென்னை : எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படம் லாபம். புறம்போக்கு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியை ஜனநாதன் இயக்கி உள்ளார்.
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கல் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இமான் இசை அமைத்துள்ளார். இப்படத்தில் சமூக ஆர்வலர் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி, நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை இரண்டு மாதங்கள் முன்பு நிறைவு செய்தது படக்குழு. லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை வெளியிடப்படவில்லை. இப்படத்தின் சிங்கிள் பாடலின் புரோமோ வீடியோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில், யாழா யாழா என தொடங்கும் பாடலின் வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யாழா யாழா பாடல் லிரிக் வீடியோ இணையத்தை ஈர்த்து வருகிறது. ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். இதன் மேக்கிங் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











