ஒரு கூட்டுக் குடும்ப பாடல்...வைரமுத்து பகிர்ந்த கட்டில் பட பாடல்
சென்னை : கட்டில் படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கவிப்பேரரசின் இந்த அழகிய வரிகளை பலரும் பாராட்டி உள்ளனர். அதோடு டைரக்டர் கணேஷ்பாபு மற்றும் ஸ்ரீகாந்த் தேவாவுடன் இருக்கும் போட்டோவையும் வைரமுத்து பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமான கணேஷ் பாபு இயக்கி நடித்துள்ள படம் கட்டில். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிரபல எடிட்டர் லெனின் திரைக்கதை, வசனம் எழுதி, எடிட்டிங்கை கவனித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.
பரம்பரை கெளரவம், பாரம்பரியம் ஆகிய ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதை போல் 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கட்டிலை ஒரு குடும்பம் எப்படி பாசத்தோடு பாதுகாக்கிறது என்பது தான் படத்தின் கதை.
இந்த படத்தின் ஷுட்டிங் 2021 ம் ஆண்டே முடிவடைந்தது. இந்த படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் எடுக்கப்பட்டது. மலையாளத்திலும் கட்டில் என்ற பெயரிலேயே இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கலாச்சாரத்தை சொல்வதாக அமைக்கப்பட்டுள்ள இந்த படத்தை பிற மொழிகளிலும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
மர்மதேசம் புகழ் எழுத்தாளர் இந்திரா செளந்திரராஜன் இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார்.அதே போல் இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம் இந்த படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான பலரும் இந்த படத்தில் பணியாற்றி உள்ளனர்.
கட்டில் படத்தில் மொத்தம் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுதி உள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் வைரமுத்து, கட்டில் படத்திற்காக எழுதிய பாடல் வரிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஒரு கூட்டுக் குடும்பப் பாட்டு
"கோயிலிலே
குடியிருந்தோம் நாங்கள்
அங்கே
குடியிருந்த
எல்லாரும் தெய்வங்கள்
சிரிப்போசை கோயில்மணி
சிறுவர்களே தீபங்கள்
பெரியவர்கள் அர்ச்சகர்கள்
பெண்கள் எல்லாம் புஷ்பங்கள்
வாழ்வே வழிபாடு"
கட்டில் படத்தின் பாடலாக்கம்
உடன் கணேஷ்பாபு, ஶ்ரீகாந்த் தேவா


Click it and Unblock the Notifications











