»   »  ஒத்திகைக்கு லேட்டா வந்த டான்சரை தனது கால்களை முத்தமிட வைத்த மடோனா

ஒத்திகைக்கு லேட்டா வந்த டான்சரை தனது கால்களை முத்தமிட வைத்த மடோனா

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: பாப் பாடகி மடோனா நடன நிகழ்ச்சியின் ஒத்திகைக்கு தாமதாக வந்த டான்சர் ஒருவரை தனது கால்களை முத்தமிட வைத்துள்ளார்.

பாப் உலகின் ராணியாக பல காலமாக இருப்பவர் மடோனா. வேலை என்று வந்துவிட்டால் மிகவும் கண்டிப்பானவர். அவர் தற்போது ரெபெல் ஹார்ட் டூர் நிகழ்ச்சியில் உள்ளார். அதாவது பல நகரங்களுக்கு தனது குழுவுடன் சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவர் நியூயார்க் நகரில் இசை நிகழ்ச்சி நடத்த ஒத்திகை நடத்தியுள்ளார்.

டான்சர்

டான்சர்

மடோனாவின் குழுவைச் சேர்ந்த ஆண் டான்சர் ஒருவர் ஒத்திகைக்கு சில நிமிடங்கள் தாமதமாக வந்துள்ளார். தாமதமாக வந்ததற்கு அவர் மாய்ந்து மாய்ந்து மடோனாவிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

மடோனா

மடோனா

குறிப்பிட்ட நேரத்திற்கு வர முடியாதா என்று கோபப்பட்ட மடோனா அந்த டான்சருக்கு தண்டனை அளித்துள்ளார். அதாவது அனைவர் முன்பும் தனது கால்களை முத்தமிட வைத்துள்ளார்.

முத்தம்

முத்தம்

என் கால்களை முத்தமிடு என்று மடோனா அந்த டான்சரிடம் கூறியதும் அனைவரும் அவர் உண்மையாக கூறுகிறாரா அல்லது ஜோக் அடிக்கிறாரா என்று தெரியாமல் இருந்துள்ளனர்.

தண்டனை

தண்டனை

மடோனா தனது கால்களை முத்தமிடுமாறு கூறியதும் டான்சரோ சற்றும் தாமதிக்காமல் அவர் கூறியவாரே செய்துள்ளார். இதை பார்த்த பிற டான்சர்கள் இனி தாமதமாக வரவே கூடாது என்று தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொண்டனர்.

English summary
Pop singer Madonna has made one of her dancers to kiss her feet as he came late for the rehearsal of her Rebel heart performance.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil