»   »  இளையராஜாவின் பாடல்களோடு மகிழ்ந்திருக்க ஒரு அட்டகாசமான செயலி!

இளையராஜாவின் பாடல்களோடு மகிழ்ந்திருக்க ஒரு அட்டகாசமான செயலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இசைஞானி இளையராஜா ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, இசையமுதம் படைத்துள்ளார்.

அந்த இசையால் ரசிகர்கள் ஆனந்தமும் மன நிம்மதியும் உற்சாகமும் பெற்றனர். ஆனால் இசையமைத்த இளையராஜாவுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகள், வருமானம் எல்லாமே இடையில் கேசட், சிடிக்கள் விற்ற சில நிறுவனங்களுக்குத்தான் போனது.

Maestro Music, a fantastic app

திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்தல், எம்பி 3 யாக மாற்றி பென் ட்ரைவ்களில் பதிவு செய்து கேட்பது என அவரது இசையை யார் வேண்டுமானாலும் உபயோகித்து பயன்பெறும் நிலை உருவானபோதுதான், இளையராஜா அதை முறைப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார்.

காப்பிரைட் சட்டப்படி தனது பாடல்களை உரிமம் பெறாமல் யாரும் விற்கமுடியாத நிலையை உருவாக்கினார். இதற்காக அவர் ஏகப்பட்ட சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி வந்தது.

அடுத்து தன் பாடல்களை பொதுமக்கள் தடையின்றி இலவசமாகக் கேட்க ஒரு செயலியை உருவாக்க வைத்தார். அதுதான் மேஸ்ட்ரோ மியூசிக். இதில் இளையராஜாவின் பாடல்கள் ரகம் ரகமாக தொகுக்கப்பட்டு, நல்ல ஒலித்தரத்தில் கேட்க முடியும். டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.

இந்த ஆப் மூலம் ரசிகர்கள் உரிமையுடன் எவ்விதத் தடையுமின்றி ராஜாவின் பாடல்களைக் கேட்டு மகிழலாம். திருட்டு ஆடியோ, முறையற்ற இசை விற்பனை என அனைத்துக்கும் ஒரு மாற்றாக இந்த ஆப் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

இன்றைக்கு ஆன்ட்ராய்டு, ஐ போன் வைத்துள்ள தமிழர்கள், இசைஞானி ரசிகர்கள் பெரும்பாலானோர், மேஸ்ட்ரோ மியூசிக் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த மேஸ்ட்ரோ மியூசிக்தான் நாளை இளையராஜாவின் பிறந்த நாளை நாள் முழுக்கக் கொண்டாடுகிறது.

English summary
Maestro Music is a fantastic music app in which every one hear and download Ilaiyaraaja's music.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil