»   »  விஜய் சேதுபதி பாடல்கள் வெளியிட்ட 'மங்கை மான்விழி அம்புகள்' !

விஜய் சேதுபதி பாடல்கள் வெளியிட்ட 'மங்கை மான்விழி அம்புகள்' !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : புதுமுக நடிகர்கள் பிரித்வி விஜய், மஹி ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குநர் வினோ இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'மங்கை மான்விழி அம்புகள்'. அறிமுக இயக்குநர் வினோ இதற்கு முன்பு பல நல்ல குறும்படங்களை எடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

'மங்கை மான்விழி அம்புகள்' படத்திற்கு தமீம் அன்சாரி இசையமைத்திருக்கிறார். ஹிட்டாகி வரும் 'யார் இவள்' பாடல் உட்பட இப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இப்படத்தின் பாடல்களை மக்கள்செல்வன் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளருக்கும் இது முதல் படமாம்.

Mangai maanvizhi ambugal

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாடலாசிரியர் மதன் கார்க்கி வெளியிட்டார். ஒளிப்பதிவாளராக லக்‌ஷ்மண் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தை ரோட் ட்ரெய்ன் பிக்சர்ஸ் சார்பில் க்ரவுட் ஃபண்டிங் முறைப்படி குறைந்த பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள்.

புதுமுகங்கள் பணியாற்றி இருக்கும் இப்படம் மேக்கிங்கில் சிறப்பாகவே வந்திருக்கிறது. இப்படத்தின் டீசரும் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. 'மங்கை மான்விழி அம்புகள்' படத்தை பிப்ரவரி மாத இறுதியில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

படத்தில் அறிமுகமாகியிருக்கும் நாயகன், நாயகி இருவருமே குறும்படங்களில் நடித்தவர்கள் தான். குறும்படங்களின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வெள்ளித்திரையில் குதித்திருக்கிறது இந்த டீம். இளம் கலைஞர்களின் தரமான சினிமா என்ட்ரிக்கு வாழ்த்துவோம்.

Read more about: music, kollywood
English summary
New comers Prithvi Vijay and Mahi are acting in the film 'Mangai maanvizhi ambugal' directed by VNO. Thameem Ansari has composed music for 'Mangai Maanvizhi ambugal'. Songs of this film were released by Vijay Sethupathi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil