»   »  ஹிப் ஹாப் ஆதியின் சொந்த வாழ்க்கைதான் மீசைய முறுக்கு! - சுந்தர் சி

ஹிப் ஹாப் ஆதியின் சொந்த வாழ்க்கைதான் மீசைய முறுக்கு! - சுந்தர் சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

அவ்னி மூவிஸ் சுந்தர் சி வழங்கும் 'மீசைய முறுக்கு' இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். இசையும் அவர்தான். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர் சி, ஹிப்ஹாப் தமிழா ஆதி, நாயகிகள் ஆத்மீகா, மனிஷா, நடிகர் விக்னேஷ் காந்த், ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார், ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன் , படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சுந்தர் சி

சுந்தர் சி

விழாவில் தயாரிப்பாளர் சுந்தர்.சி பேசியது:


'கிளப்புல மப்புல...' பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப்ஹாப் தமிழா ஆதியைச் சந்தித்தேன். அவர் ஏதோ பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தர்வர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ், டீ- ஷார்ட் போட்டுக்கொண்டு என்னை சந்திக்க வந்தார் ஆதி. ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும் என்று கூறினேன்.


முதலில் ஆம்பள படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்று இருந்தேன். ஆதி இசையமைத்த 'பழகிக்கலாம்..' பாடலைக் கேட்டேன். நன்றாக இருந்தது. அதன் பின் ஆதி 'நான் தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன்' என்று என்னிடம் கூறினார். நானும் அவரிடம் சரி என்றேன். அவர் சொன்னது போலவே ஆம்பள படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன.ஆதியின் குழு

ஆதியின் குழு

அதன் பின் ஆம்பள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆதியை நான் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று கூறினேன். சொன்னது இன்று நிறைவேறிவிட்டது. ஆதி இன்று கதாநாயகனாக, இயக்குநராக அறிமுகமாகிறார். மீசைய முறுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோகிராபி திரைப்படம் போல் இருக்கும். கொஞ்சம் கற்பனை கதை, நிறைய உண்மை கதை இது தான் மீசைய முறுக்கு திரைப்படம். ஆதி இந்த கதையை என்னிடம் கூறியதும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆதியை மிகப்பெரிய அளவில் நான் அறிமுகம் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆதி தன்னோடு மியூசிக் வீடியோவில் பயணித்த அதே டீமோடு பயணிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். அவர் சொன்னது போலவே இந்த குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது. யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள்," என்றார்.


ஆதி

ஆதி

விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசுகையில், "இன்டிபெண்டண்ட் மியூசிக்கில் ஆரம்பித்து, திரைப்பட இசையமைப்பாளராகி, தற்போது ஹீரோ மற்றும் இயக்குநராக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்சிக்குதான் நன்றி கூறவேண்டும். நான் கதாநாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தை மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்க வேண்டும் சுந்தர் சி என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இணைந்து பயணிக்கும் குழுவோடு நான் இந்த படத்தில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாகத்தான் இருக்கும் என்று உடனே ஒப்புக்கொண்டார்.


விவேக்

விவேக்

இந்தப் படத்தில் விவேக் சார்தான் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். நான் நினைத்தது போலவே அவரும் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது," என்றார்.


English summary
Hip Hop Tamila Aadhi's Meesaiya Murukku movie audio launch has benn held at Prasad Lab on Tuesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil