இப்படியும் மியூசிக் ரிலீஸா... மலைத்து நின்ற மயோர்கா!
சென்னை எக்ஸ்பிரஸ் பட ஆடியோ ரிலீஸ் விழாவுக்காக மெக்சிகோவிலிருந்து வந்திருந்தார் மயோர்கா.
விழாவுக்கு வந்தவர் வந்த வேகத்தில் ஷாருக் கானின் ரசிகையாகி விட்டார். அத்தோடு நில்லாமல் ஆடியோ விழாவும் அவரைக் கவர்ந்து விட்டதாம்.

தோழர்கள் புடை சூழ
மெக்சிகோவிலிருந்து வந்த மயோர்காவுடன் அவரது தோழர்களான பர்வேஸ் லக்டகவாலாவும், யோகேஷ் லக்கானியும் கூட வந்திருந்தனர்.

ஐ லவ் ஷாருக் கான்
விழாவில் பேசிய ரிபெக்கா, ஐ லவ் ஷாருக் கான். நான் அவருடைய பரம விசிறி. எனக்குப் பிடித்த நடிகர் அவர். இங்கு வந்து அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி தருகிறது.

அசத்தலான ஆடியோ வெளியீடு
இங்கு நடந்த ஆடியோ வெளியீட்டு விழா என்னைக் கவர்ந்து விட்டது. சந்தேகமே இல்லை, பாலிவுட்டின் ராஜா ஷாருக்தான் என்று புகழாரம் சூட்டினார்.

இன்னொரு விழாவிலும் மயோர்கா
இதேபோல பிரபல பஜன் பாடகர் அனூப் ஜலோட்டா தயாரித்துள்ள பாய்ஸ் தோ பாய்ஸ் ஹெய்ன் என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டிலும் கலந்து கொண்டார் மயோர்கா.

அத்தனை கண்களும் மயோர்கா மீதே
வந்திருந்த அத்தனை பேரையும் கவரும் வகையிலான சிவப்பு நிற உடையில் கலக்கலாக காணப்பட்டார் மயோர்கா.


Click it and Unblock the Notifications











