»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

வித்யாசாகருக்கு நேரம் சரியில்லை போலிருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழுக்குத் திரும்பி வந்த அவர் தொடர்ந்து பல படங்களில் புக் ஆகிபிசியானார். இந் நிலையில் ஒரு படத்திலிருந்து தூக்கி அடிக்கப்பட்டுள்ளார்.

துள்ளாத மனம் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் என விஜய், அஜீத்தை வைத்து இரு படங்களைக் கொடுத்த இயக்குனர் எழில்தயாரிக்கும் புதிய படத்தில் அஜீத் ஹீரேவாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைக்க வித்யாசாகர் ஒப்பந்தம்செய்யப்பட்டிருந்தார். தற்போது வித்யாசாகரை தூக்கி விட்டு எஸ்.ஏ. ராஜ்குமாரை போட்டுள்ளனர்.

வித்யாசாகர் தூக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அதில் நம்பக் கூடியதாக இரு காரணங்கள் உள்ளன.பூவெல்லாம் உன் வாசம் படத்திற்கும் வித்யாசாகர்தான் மியூசிக். ஆனால் முதல் படமான துள்ளாத மனம் துள்ளும் அளவுக்குபிரபலமாகவில்லை என்று எழில் நினைத்துள்ளார். எனவே ராசிக் கணக்கைப் பார்த்த அவர் எஸ்.ஏ.ராஜ்குமாரை மீண்டும்அழைத்துள்ளார்.

இன்னொரு காரணம், அஜீத்துக்கும், வித்யாசாகர் மீது திருப்தியில்லையாம். எனவே அவரும் வேறு மியூசிக் டைரக்டரைப்போடுங்கள் என்று யோசனை தெரிவித்தாராம். இரண்டும் சேர்ந்து வித்யாசாகருக்கு வேட்டு வைத்து விட்டன என்றுகோடம்பாக்கத்து செய்தி தெரிவிக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil