»   »  சூட்டிங் ஸ்பாட்

சூட்டிங் ஸ்பாட்

Subscribe to Oneindia Tamil

தமிழ் திரை இசையுலகின் சூப்பர் ஸ்டார்களான இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் 2002ல் தங்களது முன்னணி இடத்திலிருந்து சற்றே நழுவியிருந்தார்கள். இதுஇசையின் தரத்தை வைத்து அல்ல. இவர்கள் இசையமைத்த படங்களின் எண்ணிக்கையை வைத்துத் தான் என்பதை சொல்லிக் கொள்கிறோம்.

வழக்கம் போல தேவாவே 2002ல் முன்னணியில் இருந்தார். பரத்வாஜ் சற்று முன்னேற்றம் கண்டிருந்தார்.

தேவா 10 படங்கள் வரை இசையமைத்திருந்தார். இவற்றில் பகவதி, பஞ்ச தந்திரம், ரெட், விரும்புகிறேன் ஆகிய படங்களின் பாடல்கள் பேசப்பட்டன.மற்ற படங்களின் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை.

2-வது இடத்தைப் பிடித்தவர் 7 படங்களுக்கு இசையமைத்திருந்த பரத்வாஜ். ஜெமினி, ரோஜாக்கூட்டம் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதால் முன்னணிஇசையமைப்பாளர்கள் வரிசையில் சேர்ந்துவிட்டார்.

இசைஞானி இளையராஜா 6 படங்களுக்கு இசையமைத்துள்ளார். அழகியில் பாட்டுச் சொல்லி, பாடச் சொல்லி பாடல் தேசிய விருதப்ை பெற்றது. என் மனவானில் பாடல்கள் பேசப்பட்டன. சொல்ல மறந்த கதை, தேவன், இவன் படங்களில் பின்னணி இசையில் அசத்தியிருந்தார். ரமணாவில் ஒரு பாடல்,சாட்டிலைட் டிவிகளில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்றுள்ளது.

பரணி 6 படங்களுக்கும், எஸ்.ஏ.ராஜ்குமார் 5 படங்களுக்கும் இசையமைத்துள்ளனர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil