For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  'நான் பொன்னொன்று கண்டேன்': குத்துப்பாடலில் கலக்கும் கஸ்தூரி

  By Mayura Akilan
  |

  சென்னை: போரஸ் சினிமாஸ் சார்பில் பிரேம் கல்லாட், பிரின்ஸ் கல்லாட் தயாரிக்கும் 'நான் பொன்னொன்று கண்டேன்'. படத்தை பிரபுதேவாவின் உதவியாளர் சஞ்சீவ் ஸ்ரீனிவாஸ் இயக்கியுள்ளார்.

  இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையை விட்டு தள்ளி நீண்டதூரம் உள்ள ஈஞ்சம் பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் ஹாட் கிச்சன் ஓட்டலின் திறந்தவெளியில் நடைபெற்றது.

  சென்னையின் குளிரூட்டப்பட்ட அரங்குகளில் தான் திரை விழாக்கள் நடப்பது வழக்கம். 'நான் பொன்னொன்று கண்டேன்' பாடல்கள் வெளியீட்டு விழா இந்த மரபை உடைத்தது.

  இந்த விழாவில் நடிகர் விஜயகுமார், நடிகை கஸ்தூரி, சொர்ணமால்யா, பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட திரை உலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

  பனிவிழும் நேரத்தில்

  பனிவிழும் நேரத்தில்

  மாலை நேரத்தில் தொடங்கிய விழா பனிவிழும் இரவு வரை நீடித்தது. அந்தப் புல்வெளி எங்கும் பனித்துளிகளால் நனையும் வரை தொடர்ந்தது. பரந்த வெளியெங்கும் பார்வையாளர்களாகிய மக்கள் நிறைந்திருந்தனர்:

  நடிகர் விஜயகுமார் வெளியீடு

  நடிகர் விஜயகுமார் வெளியீடு

  புதுமுகங்கள் அஸ்வின்ராஜ், அனாமிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். அழகர் பொன்ராஜ் இசையமைத்துள்ளார். பாடல்கள் டாக்டர் கிருதியா, நலங்கிள்ளி. இப்படத்தின் பாடல்களை நடிகர் விஜயகுமார் வெளியிட்டார். நிகழ்ச்சியில் பங்கேற்ற திரையுலகினர் பெற்றுக் கொண்டனர்.

  அன்புக்கு கட்டுப்பட்டவன்.

  அன்புக்கு கட்டுப்பட்டவன்.

  விஜயகுமார் பேசும் போது. "இந்தப்படத்தின் தயாரிப்பாளர் என் நண்பர் மட்டுமல்ல சகோதரர் போன்றவர். அவரது அன்புக்குக் கட்டுப்பட்டு இவ்வளவுதூரம் வந்திருக்கிறேன் பாடல்கள் அருமையாக, கவர்ச்சியாக வந்துள்ளன. ஒரு பாடல் புரட்சித்தலைவர் பற்றி அவரது பல படங்களிள் பெயரை வைத்து உருவாக்கியுள்ளது நன்றாக உள்ளது. இந்தப் படத்தின் எல்லா விழாக்களிலும் கலந்து கொண்டுள்ளேன். வெற்றிபெற வாழ்த்துக்கள். "என்றார்.

  நடிகை கஸ்தூரி

  நடிகை கஸ்தூரி

  நடிகை கஸ்தூரி பேசும் போது, "நானும் தயாரிப்பாளரின் அன்புக்கும் நட்புக்கும் கட்டுப்பட்டுத்தான் மதித்துதான் வந்திருக்கிறேன். இங்கே எல்லாரும் வந்திருக்கிறார்கள். பிரேம் எனது நண்பர். பிரேம் அவசரமாக செய்ய மாட்டார். யோசித்தே செய்பவர். எனக்கு ஒரு பாடல் வாய்ப்பையும் கொடுத்தார்."

  நடிகை சொர்ணமால்யா

  நடிகை சொர்ணமால்யா

  சொர்ணமால்யா பேசும் போது, "சினிமாவில் வியாபாரம்தான் முக்கியம் என்பார்கள். இந்த தயாரிப்பாளர். கலைரசனை உள்ளவர். கலையார்வம் கொண்டவர்."என்றார்.

  பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்

  பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன்

  பவர் ஸ்டார் டாக்டர் சீனிவாசன் பேசுகையில் " சினிமாவை நேசித்தால் கைவிடாது ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்பது எனக்குத் தெரியும். சினிமா என்று வந்து விட்டால் அதே சிந்தனையாக எண்ணமாக இருக்க வேண்டும். எல்லாமே சினிமா என்று முழுமூச்சாக இருந்து அர்ப்பணிக்க வேண்டும். நான் அப்படித்தான் இருக்கிறேன். "என்றுகூறி வாழ்த்தினார்.

  பிரபல பாடகர்கள்

  பிரபல பாடகர்கள்

  நிகழ்ச்சியில் 'காதல் மன்னன்' மானு' பாடகர் ஹரிஷ் ராகவேந்திரா, தெலுங்கு நடிகை பரணிகா, இயக்குநர் சஞ்சய் சீனிவாஸ், கவிஞர் கிருதியா, இசை அமைப்பாளர் அழகர் பொன்ராஜ், நாயகன் அஸ்வின், நாயகி விதார்ஷா ஆகி யோரும் பேசினர். தயாரிப்பாளர் பிரின்ஸ் கல்லாட் நன்றி கூறினார்.

  புதுமுக நாயகர்கள்

  புதுமுக நாயகர்கள்

  புதுமுக நடிகர்களின் ஆதிக்கத்தில் 'நான் பொன்னொன்று கண்டேன்' உருவாகியுள்ளது. கதையின் நாயகன் தோற்றத்தால் ஒரு கள்ளிச்செடி குணத்தால் முல்லைக்கொடி. அன்பு காட்டுவதில் அவன் தனி, அடிதடி செய்வது அவன் பணி, யார் வந்து கேட்டாலும் உதவி செய்வது அவனது குணம். பேருந்து நிலையம் அவனது தாய்வீடு. அவனை பிள்ளை என்றது ஊர்.

  தாதாவின் மகள்

  தாதாவின் மகள்

  எனக்கும் அவன் ஒரு பிள்ளை என்று வளர்த்தான் ஒரு தாதா. நாயகி முள் தோட்டத்தில் பூத்த பனிரோஜா. நாயகனை ஈர்த்தது அவள் அழகு. இரண்டறக் கலந்தது

  நாயகியின் பாராமுகம்

  நாயகியின் பாராமுகம்

  அவன் மனசு.அவனது இதயக் கோயிலில் அவளைக் குழந்தையாக்கி, தாயாக்கி, தெய்வமாக்கி தினமும் கொண்டாடி வந்தான். அவளோ அவனது திருமுகம் பாராமலேயே திசைகளை அளந்து கொண்டிருந்தாள். அவனது, அந்தக் காதல் சொல்லப்பட்டதா? சொல்லாமலே கொல்லப்பட்டதா? என்பதே கதை.

  பேருந்து நிலையம்

  பேருந்து நிலையம்

  படத்தில் பேருந்து நிலையம் ஒரு பின்னணியாக மட்டுமல்ல ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது. நாள் தோறும் பேருந்து நிலையம் வந்து கடந்து போவது ஏராளமான பயணிகள் மட்டும்தானா? பேருந்து நிலையத்துக்குள் நடக்கும் இருட்டு உலகம் பலரும் அறியாதது.

  நிழல் உலகம்

  நிழல் உலகம்

  இருள் கவியும் நேரத்தில் அங்கு ஒரு கறுப்பு கட்ட பஞ்சாயத்து என்கிற பெயரில் கல்லாக்கட்டும் கூட்டம், பாலியல் தொழில், சுரண்டல்கள் என அனைத்தையும் வேடிக்கை பார்த்து உள்வாங்கிக் கொண்டு மௌன சாட்சியாக விளங்குகிற பேருந்து நிலையம்,படத்தில் ஒரு கதாபாத்திரம் போலவே வருகிறது. அதை இப்படத்தில் அழகாகக் காட்டியுள்ளார் இயக்குநர் சஞ்சீவ் சீனிவாஸ்.

  இனிமையான பாடல்கள்

  இனிமையான பாடல்கள்

  நான் பொண்ணொன்று கண்டேன் படத்திற்கு அழகர் பொன்ராஜ் இசையமைத்துள்ளார். மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

  புரட்சித்தலைவரடா.... பாடலை கிருதியா எழுத சாம் பாடியிருக்கிறார். இது என்ன மயக்கம்.... பாடலை நலங்கிள்ளி எழுத பென்னி ஜான் பாடியிருக்கிறார். மாயா வனமோ...சாயா வனமே... பாடலை கிருதியா எழுத ஹாரிஸ் ராகவேந்திரா. ஒத்தயா..ரெட்டயா.. பாடலை கிருதியா எழுத சங்கீதா பாடியிருக்கிறார். அடிய என்ன விறகா.... பாடலை கிருதியா எழுத S.P.B.சரண் பாடியிருக்கிறார்

   இயக்குனர் சஞ்சீவ் சீனிவாஸ்

  இயக்குனர் சஞ்சீவ் சீனிவாஸ்

  இவர் பிரபுதேவாவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சிவசங்கர், லாரன்ஸ். போன்றவர்களிடமும் உதவி நடன இயக்குநராகப் பணிபுரிந்தவர்.

  நாயகன் – நாயகி

  நாயகன் – நாயகி

  நாயகன் அஸ்வின்ராஜ் மாநிலக் கல்லூரியில் எம்.ஏ.படித்தவர். தடகள வீரர். நாயகி அனாமிகா மிஸ் போபால், மிஸ்மத்தியப் பிரதேசம் பட்டங்கள் வென்றவர்.

  பேயக்கா பெண்தாதா

  பேயக்கா பெண்தாதா

  பேயக்கா என்கிற பெண்தாதா வருகிறார். சொர்ணாக்காவுக்குப்பின் இந்த பேயக்கா பேசப்படுவார். வில்லன் யுக்திவேல், 'பேயக்கா' மீனா, தேனிமுருகன், காதல் காமாட்சி மற்றும் பலர் படத்தில் நடித்துள்ளனர்.

  நடிகை கஸ்தூரியில் டான்ஸ்

  நடிகை கஸ்தூரியில் டான்ஸ்

  இந்தப் படத்தில் கஸ்தூரி ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் நட்புக்காக ஆடியுள்ளார்.

  எம்.ஜி.ஆர் பாடல்

  எம்.ஜி.ஆர் பாடல்

  மொத்தம் 5 பாடல்களில் எம்.ஜி.ஆரின் புகழ்பாடும் 'புரட்சித்தலைவரடா' பாடல் பட்டையைக் கிளப்பப் போகிறது.

  பரபரப்பான சண்டை

  பரபரப்பான சண்டை

  தேனி, கம்பம், மூணாறு, உசிலம்பட்டி, தேக்கடி, சென்னை,கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் வரும் முக்கால் மணி நேரத் துரத்தல் காட்சி பேசப்படும் .

  தொழில் நுட்பக் கலைஞர்கள்

  தொழில் நுட்பக் கலைஞர்கள்

  இசை: அழகர் பொன்ராஜ், பாடல்கள்: டாக்டர் கிருதியா, நலங்கிள்ளி, ஒளிப்பதிவு : சபீர் அலிகான், ஸ்டண்ட்: ஜேசுதாஸ், கலை: ஆனந்த், தயாரிப்பு நிர்வாகம் :முருகேசன், கோபால்,மக்கள் தொடர்பு: S.செல்வரகு,தயாரிப்பு: பிரேம் கல்லாட், பிரின்ஸ் கல்லாட். கதை, திரைக்கதை, வசனம் ,நடனம்,இயக்கம்: சஞ்சீவ் சீனிவாஸ்

  English summary
  Naan ponnonru Kandaen Movie Audio Launch held on 25-01-14 Saturday 6 pm at Hot Kitchen Restaurant ECR road, Opp to VGP. Actress Kasthuri doing one item dance in this Movie

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more