சேலத்தில் அலங்கார குதிரை வண்டியில் 'நீ எனக்காக மட்டும்' இசை வெளியீடு!

By Shankar

சேலம் என்றதும் முதலில் மாம்பழம் நினைவுக்கு வருகிறதோ இல்லையோ.... மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவுக்கு வராமல் இருக்காது.

தமிழ் வளர்த்த மதுரை மாதிரி... சினிமா வளர்த்த சேலம், கோவை என்றால் மிகையல்ல. இன்றைக்கு கோலிவுட் என கோடம்பாக்கத்தை பெருமையாக சொல்லிக் கொள்கிறோம். ஆனால் உண்மையான கோலிவுட் சேலம் மற்றும் கோவைதான்.

மாடர்ன் தியேட்டர்ஸ், பட்சிராஜா பிலிம்ஸ், ஜூபிடர் என மூன்றும் பெரும் படத்தயாரிப்பு நிறுவனங்கள் இந்த பகுதிகளில்தான் இயங்கி வந்தன. இங்கு வைத்துதான் படங்கள் எடுத்தார்கள்.

குறிப்பாக சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் படப்பூஜையை தொடங்கினால், படத்தை ரிலீஸ் செய்வது வரை தேவையான அத்தனை வசதிகளும் இருந்தது!

இன்று மாடர்ன் தியேட்டர்ஸ் இல்லை. ஆனாலும் புதிதாக நியூ சேலம் மாடர்ன் பிலிம் மேக்கர்ஸ் என்ற புதிய நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர் சேலத்தைச் சேர்ந்த சிலர் ஒன்றிணைந்து.

இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் நீ எனக்காக மட்டும். இப்படத்தின் கேசட் வெளியீட்டு விழா சேலம் மாநகரில் நடைபெற்றது.

விழாவினை ஒரு திருமண விழா போல வித்தியாசமாக நடத்தினர். பாடல் சிடியை அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டியில் வைத்து மேள தாள, கரக நடனத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப நாள் கழித்து தங்கள் ஊரில் நடக்கும் சினிமா விழா என்பதால் சேலம் நகர மக்கள் இந்நிகழ்ச்சியை அதிசயத்துடன் பார்த்து ரசித்தனர்.

ஊர்வலத்தின் முடிவில் அலங்கார மேடையில் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சேலம் மாநகர மேயர் சவுண்டப்பன் தலைமை தாங்கினார். படத்தின் இயக்குனர் கேபி சக்திவேல் வரவேற்றார். ரத்னா பிலிம்ஸ் உரிமையாளர் ஜெயகுமார் முதல் சிடியை வெளியிட விநியோகஸ்தர் பரமசிவம் பெற்றுக் கொண்டார். படத்தின் நாயகிகள் ஸ்ரீலட்சுமி, வர்ஷினி குத்துவிளக்கு ஏற்றினர். நீ எனக்காக மட்டும் கதாநாயகன் தமிழ் நன்றி கூறினார்.

More from Filmibeat

Read more about: audio release tamil cinema
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X