நவரசாவின் அடுத்த பாடல் வெளியீடு... ஒசர பறந்துவர ஏக்கத்துடன் கேட்கும் அஞ்சலி
சென்னை : 9 இயக்குநர்களின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது நவரசா ஆந்தாலஜி.
இதன் முதல் பாடல் சூர்யா நடிப்பில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி அதிகமான வியூஸ்களை வாங்கியுள்ளது.
இந்நிலையில் தற்போது அதர்வா, அஞ்சலி நடித்துள்ள துணிந்தபின் படத்தின் ஒசர பறந்து வா பாடல் வெளியாகியுள்ளது.

நவரசா ஆந்தாலஜி
மணிரத்னத்தின் முயற்சியில் கொரோனா காலத்தில் திரையுலக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது நவரசா ஆந்தாலஜி. வரும் 6ம் தேதி நெட்பிளிக்சில் வெளியாகவுள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாகவே நவரசா ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.

பாடல் வெளியீடு
9 இயக்குநர்கள் 9 ரசங்களை மையமாக கொண்டு உருவாக்கியுள்ள இந்த ஆந்தாலஜியில் கௌதம் மேனன் மற்றும் சூர்யா இணைந்துள்ள கிடார் கம்பி மேலே நின்று படத்தின் பாடல் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட வியூஸ்களை ஒரே நாளில் வாங்கியுள்ளது.

வரவேற்பை பெற்ற பாடல்
தூரிகா என்ற அந்த பாடலுக்கு கார்த்திக் இசையமைத்து பாடலையும் பாடியுள்ளார். சூர்யா மற்றும் பிரயாகா நடித்துள்ள இந்த படத்தின் லிரிக் வீடியோவாக அந்த பாடல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மாறுபட்ட கெட்டப்பை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது.
புதிய பாடல்
இந்நிலையில் தற்போது அதர்வா மற்றும் அஞ்சலி நடிப்பில் சர்ஜூன் இயக்கியுள்ள நவரசாவின் துணிந்தபின் படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலும் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது. ஒசர பறந்து வா என்று அஞ்சலி ஏக்கத்துடன் கேட்கும் வகையில் பாடல் அமைந்துள்ளது. இதில் அதர்வா ராணுவ வீரராக காட்சியளிக்கிறார்.


Click it and Unblock the Notifications











