»   »  பிந்துகோஷ் மகன்களின் 'ஒரு செல்லுலாயிட் காதல்'!

பிந்துகோஷ் மகன்களின் 'ஒரு செல்லுலாயிட் காதல்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: காதலர் தினத்தை நேற்று உலகமே கொண்டாடிக் கொண்டிருந்த அதே வேளையில் இங்கே சென்னையிலும் ஒரு அற்புதமான நிகழ்ச்சி நடந்தேறியது.

ஆமாம் காதலர் தின ஸ்பெஷலாக ஒரு செல்லுலாயிட் காதல் என்ற இசை ஆல்பத்தை பிரபல நடிகை பிந்துகோஷின் மகன்கள் திருக்குமரன் மற்றும் சிவாஜி ஆகியோர் வெளியிட்டனர்.

காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று சென்னை விஜயா ஃபோரம் மாலில் காதலர்கள் மத்தியில் இந்த ஆல்பம் வெளியிடப்பட்டது. ஆல்பத்தை 'காதல் சுகுமார்' வெளியிட நடன இயக்குநர் 'காதல் கந்தாஸ்' அதனை பெற்றுக் கொண்டார்.

பிந்துகோஷ் மகன்களின் 'ஒரு செல்லுலாயிட் காதல்'!

காதலர் தினம்

நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு 'ஒரு செல்லுலாயிட் காதல்' என்ற இசை ஆல்பம் காதலர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. சென்னை வடபழனியில் உள்ள விஜயா ஃபோரம் மாலில் இந்த ஆல்பம் காதலர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2௦௦௦க்கும் அதிகமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

பிந்துகோஷ் மகன்கள்

பிரபல நகைச்சுவை நடிகை பிந்துகோஷ் அவர்களின் மகன்கள் திருக்குமரன் மற்றும் சிவாஜி ஆகியோரின் எண்ணத்தில் இந்த காதல் ஆல்பம் உருவாகியுள்ளது. காதல் காலம் படத்தில் நடித்துள்ள ஹீரோ சந்துரு, மற்றும் ஹீரோயின் சார்வி இருவரும் இந்த ஆல்பத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஆல்பத்தை ரசித்த பலரும் இதனை படத்திலும் பயன்படுத்தலாம் என்று கருத்து கூறினர்.

பரிசுப் பொருட்கள்

இந்த ஆல்பத்தின் வெளியீடைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் காதலர்கள், தம்பதியர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் காதல் கந்தாஸ், காதல் சுகுமார் பரிசுகளை அளித்து உற்சாகப்படுத்தினர்.

கலக்கப்போவது யாரு

ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக அரங்கேறிய இந்த விழாவை 'கலக்கப்போவது யாரு' புகழ் ரக்‌ஷன் மற்றும் சுமையா தொகுத்து வழங்கினார்கள்.
ஒரு செல்லுலாயிட் காதல் காதலர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
'Oru Celluloid Kadhal' Musical Album launch was held at Vijaya Forum Mall Yesterday at 5pm. Dance Choreographer "Kadhal' Kandas & 'Kadhal' Sukumar were the chief guest and Released the Album in front of 2000 Youthful Numbers who turned out at the event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil