டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோவாகும் ‘ஒரு குப்பைக் கதை’- ஆடியோவை ரிலீஸ் செய்த சிவகார்த்திக்கேயன், ஆர்யா!
'ஒரு குப்பைக் கதை' படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: நடன இயக்குனர் தினேஷ் ஹீரோவாக அறிமுகமாகும் 'ஒரு குப்பைக் கதை' படத்தின் டிரெய்லர் மற்றும் இசையை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.
பிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் அஸ்லாம் தயாரித்துள்ள படம் 'ஒரு குப்பைக் கதை'. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வழங்கும் இந்த படத்தின் மூலம் காளி ரங்கசாமி இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிரபல நடன இயக்குனர் தினேஷ் இந்த படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். வழக்கு எண், ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த நடிகை மனிஷா யாதவ் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்துக்கு ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ளார். தீபன் சக்ரவர்த்தி பன்னணி கம்போஸ் செய்திருப்பதுடன், ஒரு பாடலுக்கு இசையும் அமைத்திருக்கிறார்.
இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஆர்யா, உதயநிதி, ஸ்ரீகாந்த், இயக்குனர்கள், அமீர், சீனுராமசாமி, எழில், சுதீந்திரன், பாண்டிராஜ், பொன்ராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட்டனர்.
விழாவில் கலந்துகொண்ட அனைவரும் படத்தை பாராட்டி பேசினர். ஒரு குப்பைக் கதை படம் இம்மாதம் 25ம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











