50 மில்லியன் பார்வையாளர்களை தொட்ட "பேர் வச்சாலும்" ரீமிக்ஸ் பாடல்!

சென்னை : நடிகர் சந்தானத்தின் நடிப்பில் டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவான திரைப்படம் டிக்கிலோனா.

Recommended Video

Natpe thunai anagha interview | நட்பே துணை நாயகி அனகாவுடன் நேர்க்காணல்

அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியிருந்த இந்தத் திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இப்படத்தில் இடம் பெற்ற பேர் வச்சாலும் ரீமிக்ஸ் பாடல் இப்பொழுது இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் யூட்யூபில் 50 மில்லியன் பார்வைகளை தொட்டு சாதனை படைத்துள்ளது.

டிக்கிலோனா

டிக்கிலோனா

காமெடியனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இப்போது ஆக்ஷன் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள திரைப்படம் டிக்கிலோனா.

காமெடிக்கு பஞ்சமில்லாமல்

காமெடிக்கு பஞ்சமில்லாமல்

டைம் டிராவலிங்கை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அனகா,ஸ்ரீனி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்க யோகிபாபு, ஆனந்தராஜ், முனிஸ்காந்த்,மொட்டை ராஜேந்திரன், மாறன் என பலர் இதில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து கலக்கி இருந்தார். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் முழுவதும் காமெடிக்கு பஞ்சமில்லாமல் திரைக்கதை சென்றது படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது.

டைம் டிராவலிங்கை

டைம் டிராவலிங்கை

மேலும் முதல் முறையாக சந்தானம் மூன்று விதமான வேடங்களில் நடித்து அசத்தி இருந்தார். டைம் டிராவலிங்கை மையப்படுத்திய திரைப்படமாக இருந்தாலும் அதில் எந்த ஒரு குழப்பமும் இல்லாமல் ரசிகர்களை சிரிக்க வைப்பதை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

பேர் வச்சாலும் ரீமிக்ஸ்

பேர் வச்சாலும் ரீமிக்ஸ்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்க இசைஞானி இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான பேர் வச்சாலும் வைக்காம போனாலும் பாடல் டிக்கிலோனா திரைப்படத்தில் ரீமிக்ஸ் பாடலாக இடம்பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்து உருவாக்கி இருக்க இளமைத் துள்ளலுடன் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இந்தப் பாடல் தற்போதுள்ள இளைஞர்களை கூட வெகுவாக ஈர்த்துள்ளது.

50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து

குறிப்பாக சமூக வலைத்தளங்களில் இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்க பல மொழி ரசிகர்களும் இப்பாடலை ரசிக்கின்றனர். இந்த பாடலுக்கு படத்தில் வருகின்றது போல அதே மாதிரி நடனமாடி வீடியோக்களையும் பெரும்பான்மையானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவ்வாறு அனைவரும் ரசிக்கின்ற மிகச் சிறந்த ரீமிக்ஸ் பாடலாக உள்ள பேர் வச்சாலும் பாடல் இப்பொழுது 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X