»   »  புலி இசை வெளியீடு... மாமல்லபுரத்தில் நடத்தத் திட்டம்?

புலி இசை வெளியீடு... மாமல்லபுரத்தில் நடத்தத் திட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்துள்ள புலி படத்தின் இசை வெளியீட்டு மாமல்லபுரத்தில் உள்ள சொகுசு விடுதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

புலி படத்தின் டீசர் வெளியாகி 60 லட்சம் பேரும் மேல் பார்த்து ரசித்துள்ளனர்.


Puli audio launch at Mamallapuram

இப்போது படத்தில் விஜய்யும் ஸ்ருதிஹாஸனும் பாடிய பாடலின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏன்டீ ஏன்டீ பாடல் இப்போதே பிரபலமாகிவிட்டது.


இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் வெளியிட முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.


மாமல்லபுரத்தில் உள்ள உல்லாச விடுதியொன்றில் வைத்து இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார்கள். திரையுலகினர் திரளாகக் கலந்து கொள்ளப் போகிறார்கள்.

English summary
The audio launch of Vijay's Puli will be held at Mamallapuram resort on August first week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil