»   »  பரபரவென வெளியான 'புலி'ப் பாட்டு.. கேட்டீங்களா நீங்கள் கேட்டீங்களா?

பரபரவென வெளியான 'புலி'ப் பாட்டு.. கேட்டீங்களா நீங்கள் கேட்டீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இருக்கும் புலி திரைப்படத்தின் பாடல்கள் இன்று வெளியாகி உள்ளது.

சிம்புதேவன் இயக்கத்தில் சுமார் 100 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் அபரிமிதமான ஆவலை உண்டு பண்ணியிருக்கிறது.


மொத்தம் 6 பாடல்கள் படத்தில் இடம்பெற்று உள்ளன. அவற்றில் ஒரு பாடலை விஜய் நடிகை சுருதிஹாசனுடன் இணைந்து பாடியிருக்கிறார்.


தேவிஸ்ரீபிரசாத்தின் இசையில், வைரமுத்துவின் வரிகளில் வெளியாகி இருக்கும் பாடல்களை பற்றி இங்கே பார்க்கலாம்...


ஏண்டி ஏண்டி

ஏண்டி ஏண்டி

ஏண்டி ஏண்டி என்று தொடங்கியிருக்கும் இந்தப் பாடலை விஜய் மற்றும் சுருதிஹாசன் இருவரும் இணைந்து பாடியிருக்கிறார்கள், வைரமுத்துவின் அழகான வரிகளில் பாடல் காதல் பாடலாக உருவாகி இருக்கிறது. கிடார் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தி இந்தப் பாடலுக்கு அற்புதமான ஒரு இசையை அளித்திருக்கிறார் தேவிஸ்ரீபிரசாத். விஜய், சுருதிஹாசன் குரல்களில் ஏண்டி, ஏண்டி மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். அருமையான பாடல்.


ஜிங்கிலியா

ஜிங்கிலியா

பி மற்றும் சி ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் பாடல் தான் ஜிங்கிலியா. ஜாவேத் அலி மற்றும் பூஜா ஆகியோர் இந்தப் பாடலை இணைந்து பாடியிருக்கின்றனர். வைரமுத்துவின் வரிகளில் மசாலா அதிகம் கலந்து உருவாகியிருக்கும் ஜிங்கிலியா காரம் சற்று அதிகம்.


சொட்டவாலா

சொட்டவாலா

இந்தியாவின் மிகச்சிறந்த பாடகரான சங்கர் மகாதேவன் - மானசியின் குரல்களில் வெளிவந்திருக்கும் பாடல் சொட்டவாலா. நீங்கள் ஒருமுறை கேட்டால் மறுமுறை அதற்கடுத்த முறை என்று மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் விதத்தில் இருக்கிறது சொட்டவாலா. தேவிஸ்ரீபிரசாத்தின் வெற்றிபாடல்களில் சொட்டவாலாவிற்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. வைரமுத்துவின் வரிகளை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


மன்னவனே மன்னவனே

மன்னவனே மன்னவனே

வைரமுத்துவின் வரிகளில் உருவான மன்னவனே மன்னவனே பாடலை அனிதா, சின்மயி, எம்எல்ஆர் கார்த்திகேயன் மற்றும் சூரஜ் சந்தோஷ் ஆகிய நிறைய பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர். மன்னவனே மன்னவனே இந்த மன்னவனை ரசிக்கலாம்.


புலி

புலி

அறிமுகப் பாடலாக உருவாகி இருக்கும் புலி பாடலை வசிய மற்றும் சக்தி வாய்ந்த குரலுக்கு சொந்தக்காரரான மனோ பாடியிருக்கிறார், பாடல் எப்படி வந்திருக்கிறது என்பதைக் காண படம் வெளிவரும்வரை காத்திருக்க வேண்டியதுதான் வேறுவழி இல்லை. வலுவான வரிகளைக் கேட்கும்போது வைரமுத்து மீது மரியாதை கூடுகின்றது.


மனிதா மனிதா

மனிதா மனிதா

ஒரு போருக்கு முன்னாலோ அல்லது ஒரு வலுவான காட்சிக்கு முன்னாலோ இந்தப் பாடல் வரலாம் என்று யூகிக்கும் வகையில் பாடல் உருவாகி இருக்கிறது. திப்பு பாடியிருக்கும் இந்தப்பாடல் ஒரு ஊக்கமூட்டும் பாடலாக இருக்கின்றது, நமது யூகங்களை சற்று ஒதுக்கி வைத்து விட்டு இந்தப் பாடலைக் கேட்டால் திப்புவின் குரல் ரசிக்கத் தோன்றுகிறது. திப்புவின் வரிகளில் மனிதா, மனிதா கேட்கத் தூன்றும் ரகம்.


மொத்தத்தில் வைரமுத்துவின் வரிகளில் தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை கலந்து உருவாகியிருக்கும் புலி,பாடல்கள் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்பதில் சந்தேகமில்லை...English summary
Puli Audio Songs - Round Up.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil