Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
லல்லாரியோ லல்லாரியோ.. ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் படத்திலிருந்து அடுத்த பாடல் வெளியானது!
சென்னை : அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கியுள்ள ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் என்ற படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.
ரம்யா பாண்டியன் இதில் ஹீரோயினாக நடிக்க அவருக்கு ஜோடியாக மிதுன் மாணிக்கம் நடித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் ஆட்டம் போட்ட சிம்பு.. வேற லெவலில் வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் இப்படத்தில் இருந்து லல்லாரியோ லல்லாரியோ என்ற இனிமையான பாடல் தற்பொழுது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.

குழந்தைகளை போல:
கிராமத்து கதை களத்தில் அரசியல் குறித்த திரைப்படமாக ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகர் மிதுன் மாணிக்கம் நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் மற்றும் முத்து மாணிக்கம் இந்த படத்தில் பெற்ற குழந்தைகளை போல செல்லமாக இரண்டு மாடுகளை வளர்க்கின்றனர். அதில் ஒரு மாட்டிற்கு வெள்ளையன் எனவும் மற்றொரு மாட்டிற்கு கருப்பன் எனவும் பெயர் வைத்து வளர்த்து வருகின்றனர்.

அரசியல்வாதிகளின் சூழ்ச்சி
ஒரு நாள் திடீரென்று அந்த மாடுகள் காணாமல் போக அதை கண்டுபிடிக்க மிதுன் மற்றும் ரம்யா பாண்டியன் எவ்வாறெல்லாம் போராடுகின்றார்கள். அந்தப் போராட்டத்தில் எத்தனை அரசியல்வாதிகளின் சூழ்ச்சிகள் உள்ளது என்பதை மிகவும் சுவாரசியமாகவும் உண்மை தன்மை குறையாமலும் காட்டியுள்ளனர் மேலும் இந்த படத்தில் நடிகை வாணி போஜன் ரிப்போர்ட்டராக வருகிறார். ரம்யா பாண்டியன் மற்றும் மிதுனின் இரண்டு மாடுகளை கண்டுபிடிக்க வாணி போஜன் பெரும் உதவியாக கடைசிவரை போராடுகிறார்.

அரசியல் சவுக்கடி
அறிமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இப்படத்தை இயக்கி இருக்க நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் கிராமத்து களத்தில் மிக எளிமையான திரைப்படமாக உருவாகி இருந்தாலும் அதில் கூறியுள்ள கருத்துக்கள் மற்றும் வசனங்கள் அரசியல் சவுக்கடியாக உள்ளது.

லல்லாரியோ லல்லாரியோ பாடல்
வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி நேரடியாக அமேசான் தளத்தில் இப்படம் வெளியாக இருக்கும் சூழலில் படத்திலிருந்து "லல்லாரியோ லல்லாரியோ" என்ற மனதுக்கு இதமான பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. இசையமைப்பாளர் கிரிஷ் இசையமைத்து இருக்கும் இந்தப் பாடலை வி. மதன் குமார் எழுதியுள்ளார் வேல்முருகன் பாடியுள்ளார்.