»   »  அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி

அவன் ஆடும்போதே நினைச்சேன் நடிக்க வருவான்னு: சரவணா ஸ்டோர்ஸ் ஓனரை கலாய்த்த ராதாரவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

ஜீவா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள படம் சங்கிலி புங்கிலி கதவ தொற. ஐக் இயக்கியுள்ள இந்த படத்தை அட்லீ தயாரித்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பேசும்போது,

ஜீவா

ஜீவா

ஜீவா என் முதலாளி. அவரின் அப்பா ஆர்.பி. சவுத்ரி சாரால் தான் ராதாரவி ஒரு நேரம் சாப்பிடுகிறான். ஸ்ரீதிவ்யா தேங்ஸ் மட்டுமே சொல்லிட்டு போச்சு.

சினிமா

சினிமா

எனக்கு பிறகு என் மகன் உள்ளான். அவனிடம் சினிமா என்றாலே 8 மைல் ஓடுகிறான். அய்யய்யே என்கிறான். அப்படி எல்லாம் சொல்லாதடா என்று கூறியுள்ளேன். சினிமாவில் நன்றி கெட்ட பயலுக நிறைய இருக்காங்கன்னு அவன் தெரிஞ்சுக்கிட்டான்.

சரவணா ஸ்டோர்ஸ்

சரவணா ஸ்டோர்ஸ்

வாரிசுகள் வருகிறார்கள். அரசியலில் வருகிறார்கள், ஹோட்டலில் வருகிறார்கள். பாருங்க சரவணா ஸ்டோர்ஸில் வருகிறார்கள். அவன் ஆடும்போதே நினைச்சேன் சினிமாவுக்கு வரப் போகிறான் என்று. சினிமா கெட்டுப் போச்சு என்ன செய்ய.

படம்

படம்

சங்கிலி புங்கிலி கதவை தொற படம் ஓஹோன்னு ஓடும் என்பதை தயாரிப்பாளரிடம் கூறிக் கொள்கிறேன். எங்கப்பா தமிழ்நாடு பூரா பரப்பியுள்ளார் குடும்பத்தை.

விஸ்வரூபம்

விஸ்வரூபம்

கமல் ஹாஸனை அழ வைத்த ஒரே படம் விஸ்வரூபம். அவர் டிவியில் அழுததை சொன்னேன். அதை சொல்றேன். நான் அந்த ஆள் அழுது பார்க்க முடியாது. நான் பால்ய சினேகிதன். நன்றி உள்ளவன் என்றார் ராதாரவி.

English summary
Actor Radha Ravi said that he knows Saravana stores owner will act in movies after seeing him dancing for the advertisement.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil