»   »  ரஜினி வெளியிட்ட பில்லா ஆடியோ!

ரஜினி வெளியிட்ட பில்லா ஆடியோ!

Subscribe to Oneindia Tamil
Ajith with Namitha
அஜீத், நயனதாரா, நமீதா நடிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா -2007 படத்தின் ஆடியோவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

ரஜினிக்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்த சூப்பர் டூப்பர் ஹிட் படமான பில்லா, பில்லா -2007 என்ற பெயரில் அஜீத் நடிப்பில் உருவாகியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு கமுக்கமாக நடந்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஆடியோவை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் தனது போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து பில்லா ஆடியோவை எளிமையான முறையில் வெளியிட்டார் ரஜினி.

பிரமாண்டமான முறையில் பில்லா பாட்டுக்களை வெளியிட பில்லா குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை நல்ல நாள் என்பதால் உடனடியாக வெளியிட்டு விடலாம் என ரஜினியே விருப்பப்பட்டாராம். இதையடுத்தே ரஜினி வீட்டில் வைத்து சத்தம் போடாமல் ஆடியோ வெளியீடு நடந்துள்ளது.

நிகழ்ச்சியில், அஜீத், தயாரிப்பாளர் ஆனந்தா சுரேஷ், இயக்குநர் விஷ்ணுவர்த்தன், ஆடியோ வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள ஐங்கரண் கருணாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று முதல் பில்லா படப் பாடல் கேசட்டுகள் மற்றும் சிடிக்கள் விற்பனைக்கு வருகின்றன.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil