வீச்சருவா ஏந்திய குல சாமியா மாறிய ரஜினிகாந்த்.. வெளியானது அண்ணாத்த படத்தின் வா சாமி பாடல்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் நான்காவது பாடலான 'வா சாமி' தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளை திருவிழாவாக்க ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகிறது.
இதுவரை அண்ணாத்த படத்தின் 3 பாடல்கள் மற்றும் ஒரு டீசர் வெளியான நிலையில், 4வது பாடலான வா சாமி பாடல் தற்போது கூஸ் பம்ப்ஸ் கொடுத்து வருகிறது.

அண்ணாத்த ஆட்டம் ஆரம்பம்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள அண்ணாத்த படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. அண்ணாத்த திருவிழாவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடங்கி உள்ளனர்.

தெறிக்கவிடும் இமான்
சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இமான் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ஒவ்வொரு பாடலையும் வேற லெவல் ஹைப்புடன் போட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளார். அதிலும், தற்போது வெளியாகி உள்ள வா சாமி பாடல் இமானின் வெறித்தனம்.

சாமியாட போறாங்க
தியேட்டரில் கண்டிப்பாக இந்த பாட்டுக்கு எத்தனை ரசிகர்கள் சாமியாட போறாங்கன்னு தெரியல.. ரஜினிகாந்துக்கு ஏற்ற பவர்ஃபுல்லான பாடலாக "வா சாமி" பாட்டு நிச்சயம் இருக்கும் என்பது பாட்டை கேட்ட மறு கணமே ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் முடிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

திருமூர்த்தி குரலில்
அருண் பாரதியின் கொல மாசான வரிகளில் முகேஷ் முகமது, நொச்சிப்பட்டி திருமூர்த்தி, கீழக்கரை சம்சுதீன் உள்ளிட்ட மாற்றுத் திறனாளி பாடகர்கள் ரஜினிகாந்தின் வா சாமி பாடலை மெய் மறந்து பாடி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளனர். இமானின் பாடகர்கள் தேர்வுக்கே தனி பாராட்டு கொடுக்கலாம்.
குல சாமியான ரஜினி
இசையமைப்பாளர் இமான் இசையில் மயிற்கூச்செரியும் பாடலாக 'வா சாமி' பாடல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. நிச்சயம் இந்த பாட்டுக்கு அரங்கம் அதிரப் போவது கன்ஃபார்ம் எத்தனை பேர் ஸ்க்ரீன் முன்னாடி சூடம் ஏத்த காத்திருக்கின்றனர் என்பதை தீபாவளிக்கு பார்ப்போம். வேறு எதையாவது குல சாமிக்கு வெட்டாமல் இருந்தால் சரி.


Click it and Unblock the Notifications











