»   »  எல்லோரையும் கூட்டிச் ெசல்ல கப்பல் வருமா...!

எல்லோரையும் கூட்டிச் ெசல்ல கப்பல் வருமா...!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ஜீவா, பாவனா நடிப்பில் உருவாகியுள்ள ராமேஸ்வரம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா வித்தியாசமாக நடந்தது.
இலங்கை அகதி மக்களின் கதையைப் பின்னணியாகக் கொண்ட படம் ராமேஸ்வரம்.

செல்வம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசை நிரு. இவரும் இலங்கையில் இருந்து அகதியாக வந்தவர் தான். அதனால் தானோ என்னவோ அந்த புலம் பெயர்ந்த மக்களின் வலியை அப்படியே துல்லியமாக பிரதிபலித்திருக்கிறார்.

தீபாவளிக்குத் திரைக்கு வரும் இப்படத்தை 3 மாதம் ராமேஸ்வரத்தில் முகாமிட்டு படம் பிடித்துள்ளனர். இலங்கை அகதிகள் தமிழகத்தில் படும் அவஸ்தைகளை சித்தரிக்கும் கதை இது.

அகதி முகாமில் வசிக்கும் ஒரு வாலிபனுக்கும், தமிழ்ப் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலை, ஈழத் தமிழர்களின் துயர நிலையின் பின்னணியில் சொல்லியுள்ளார் புதுமுக இயக்குநர் செல்வம்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. அதுவும் வித்தியாசமாக.

சன் குழுமத்தின் இசைச் சானலான சன் மியூசிக் இதை, நேரடியாக ஒளிபரப்பியது. சன் குழுமத்தின் செட்டிலேயே இந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஜீவா, இயக்குநர் செல்வம், இசையமைப்பாளர் நிரு ஆகியோரும் இதில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் நேயர்கள் பலரும் தொலைபேசி மூலம் இவர்களுடன் உரையாடி பல்வேறு கேள்விகளைக் கேட்டனர். ஜீவா உள்ளிட்டோரும் தங்களது பட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

புதுமுகமான நிரு இப்படத்திற்கு முதல் முறையாக இசையமைத்த அனுபவத்தை நேயர்களிடம் எடுத்துரைத்தார். மேலும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாடகர் சாலிக் கானும், படத்தில் இடம் பெறும் ஒரு பாடலை நேரடியாக பாடிக் காண்பித்தது வித்தியாசமாக இருந்தது.

எல்லோரையும் கூட்டிச் ெசல்ல கப்பல் வருமா என்று ஒரு இலங்கை தமிழ் சிறுமி பாடும் பாடலை கேட்கும் யாராலும் கண்ணீரைக் கட்டுப்படுத்துவது அவ்வளவு எளிதாய் இருக்காது. பாட்டில் அவ்வளவு வலி.. குரலில் அப்படி ஒரு ஏக்கம்.

ஹேட்ஸ் ஆப் நிரு...

Read more about: bhavana, jeeva, rameshwaram

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil