»   »  “சகாப்தம்”.. ஆடியோ உரிமையை ரூ. 42 லட்சத்து வாங்கிய லகரி நிறுவனம்

“சகாப்தம்”.. ஆடியோ உரிமையை ரூ. 42 லட்சத்து வாங்கிய லகரி நிறுவனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சகாப்தம் திரைப்படத்தின் ஆடியோ உரிமையினை லகரி ஆடியோ நிறுவனம் 42 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் "சகாப்தம்".

இதில் சண்முகபாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ராஜயப்பா நடிக்கின்றனர்.

சுரேந்திரனின் இயக்கம்:

சுரேந்திரனின் இயக்கம்:

ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு:

வெளிநாட்டில் படப்பிடிப்பு:

இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக சிங்கப்பூர், மலேசியா, பாங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரமாண்டமான வகையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

லகரி வாங்கிய ஆடியோ உரிமை:

லகரி வாங்கிய ஆடியோ உரிமை:

தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை கூலிக்காரன், அண்ணாமலை, ரோஜா, காதலன், ஜென்டில்மேன் ஆகிய வெற்றிப்படங்களின் ஆடியோ உரிமையை வாங்கியுள்ள லகரி ஆடியோ நிறுவனம் கடும் போட்டிகளுக்கிடையே 42 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

முன்னணி நிறுவனம்:

முன்னணி நிறுவனம்:

இந்த லகரி ஆடியோ நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நிறுவனமாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் சகாப்தம் பட ஆடியோவை இந்நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

அடியே ரதியே பாடல்:

அடியே ரதியே பாடல்:

மேலும் இந்த படத்தில் கார்த்திக்ராஜா இசையில் சிம்பு, ரம்யா நம்பிசன் மற்றும் ஆன்ட்ரியா பாடிய "அடியே ரதியே" என்ற பாடல் இன்று யூடியூபில் வெளியிட்டப்பட்டது. பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கானவர்கள் பாடலை கேட்டு ரசித்துள்ளனர்.

English summary
Lahari audio studio bought the audio rights of Sanmugapandiyan’s Sahaptam film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil