»   »  என் மகன் விஜய்யின் வளர்ச்சி மாதிரியே விஜய் ஆன்டனி வளர்ச்சியும் மகிழ்ச்சி தருகிறது! - எஸ்ஏசி

என் மகன் விஜய்யின் வளர்ச்சி மாதிரியே விஜய் ஆன்டனி வளர்ச்சியும் மகிழ்ச்சி தருகிறது! - எஸ்ஏசி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தன்னுடைய திரைப்படங்களுக்கு எதிர்மறையான தலைப்புகளைத் தேர்வு செய்வதையே வெற்றிக்கான சூத்திரமாக வைத்திருப்பவர் விஜய் ஆன்டனி. அந்த வகையில் அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பெரிதும் கிளறிவிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற சைத்தான் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா ஏகத்துக்கும் களைகட்டியிருந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரையுலகின் மூத்த இயக்குனரும் - தயாரிப்பாளருமான எஸ் ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ், - 'அம்மா கிரியேஷன்ஸ்' டி சிவா, தயாரிப்பாளர் எஸ் ஆர் பாபு, தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ், நடிகர் சிபிராஜ், இயக்குநர் ஜி என் ஆர் குமரவேல், இயக்குநர் சசி (பிச்சைக்காரன்), இயக்குநர் ஆனந்த் (இந்தியா - பாகிஸ்தான்), இயக்குநர் நிர்மல் குமார் (சலீம்), இயக்குநர் செந்தில் குமார் (வாய்மை) உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Saithan audio launched grand manner

டி சிவா பேசுகையில், "திரையுலகின் வெறித்தனமான 'சைத்தான்' விஜய் ஆண்டனி. 'தன் நம்பிக்கை' என்னும் புத்தகமாக செயல்படும் அவரின் வெற்றிக்கு முதுகெலும்பாய் இருப்பவர், அவருடைய துணைவியார் பாத்திமா விஜய் ஆண்டனிதான்....," என்று வாழ்த்தினார்.

Saithan audio launched grand manner

"விஜய் ஆண்டனி நடித்த நான் திரைப்படத்தைப் பார்த்த பிறகு, நான் அவருடைய ரசிகனாக ஆகிவிட்டேன். அவர் தேர்ந்தெடுத்து நடித்த ஒவ்வொரு திரைப்படமும் என் மனதோடு ஒட்டி பயணிக்க கூடியதாகத்தான் இருக்கும்.... தற்போது அவருடைய 'சைத்தான்' அவதாரத்தைக் காண நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர் 'ஆரா சினிமாஸ்' மகேஷ் கோவிந்தராஜ் இந்த சைத்தான் திரைப்படத்தோடு இணைந்திருப்பது எனக்கு மேலும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. 'சைத்தான்' திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்...." என்று கூறினார் தயாரிப்பாளர் 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' டாக்டர் கே கணேஷ்.

எதிர்மறை தலைப்புகள்

"விஜய் ஆண்டனி படங்களின் தலைப்புகள் எதிர்மறையாக இருந்தாலும், அந்த படங்களின் கதைக் களங்கள் யாவும் அவரைப் போலவே ரசிகர்களின் மனதை வெல்ல கூடியவையாகத்தான் இருக்கும். தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களின் மத்தியிலும் அவர் ஹீரோவாக வலம் வருவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. என்னுடைய மகன் விஜயின் வளர்ச்சியைக் கண்டு நான் எப்படி மகிழ்ச்சி கொள்கிறேனோ, அதேபோலத்தான் விஜய் ஆண்டனியின் வளர்ச்சியையும் கண்டும் நான் ஆனந்தம் கொள்கிறேன்...," என்று வாழ்த்தினார் எஸ் ஏ சந்திரசேகர்.

தெலுங்கில் 'பெத்தலுடு' என்ற தலைப்பில் வெளியாகும் சைத்தான், ஆந்திரா - தெலங்கானாவில் மட்டும் 600 அரங்குகளில் வெளியாகிறது.

English summary
Vijay Antony's next Saithan movie audio was launched in grand manner at Sathyam Cinemas.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil