»   »  என் தமிழ்நாடு... ஹிப்ஹாப் தமிழா வழியில் ஆல்பம் வெளியிடும் சந்தோஷ் நாராயணன்!

என் தமிழ்நாடு... ஹிப்ஹாப் தமிழா வழியில் ஆல்பம் வெளியிடும் சந்தோஷ் நாராயணன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போது இருக்கும் இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் படங்களுக்கு இசையமைப்பதோடு மட்டுமல்லாமல் தங்கள் இருப்பைக் காட்டிகொள்ள சமூகம் தொடர்பான ஆல்பங்களும் வெளியிடுகின்றனர்.

அப்படி ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜல்லிக்கட்டை வலியுறுத்தி வெளியிட்ட ஆல்பம் செம ஹிட் அடித்து பரபரப்பானது. ஆதி ரூட்டில் அடுத்து இறங்கியிருப்பவர் சந்தோஷ் நாராயணன். விஜய் படம் உட்பட பல படங்கள் கையில் இருக்க, அது ஒரு பக்கம் நடக்கட்டும் இந்த பக்கம் ஒரு ஆல்பம் பண்ணுவோம் என இறங்கியிருக்கிறார்.

Santhosh Narayanan's new album En Tamil Nadu

என் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆல்பத்தை இயக்கியிருப்பவர் இறைவி படத்திற்காக மனிதி பாடலை இயக்கிய சபரிஷ் என்ற வருங்கால இயக்குனர். விளம்பர படங்களின் இயக்குனரான சபரீஷ் யூட்யூப் தளத்தில் பிரபலமானவர்.

இந்த ஆல்பத்தின் நோக்கமே தமிழ்நாட்டின் ஊர்களுக்கெல்லாம் சென்று அந்தந்த பகுதியில் இதுவரை அதிகம் அறியப்படாத பெருமைகளை வெளியில் கொண்டு வருவதே ஆகுமாம். இதற்காக தமிழ்நாடு முழுக்க சென்று ஆராய்ந்து படம் பிடித்துவந்திருக்கிறது குழு.

ஆல்பம் தானே என்று அலட்சியாமல் விடாமல் இந்த ஆல்பத்துக்காக ஆஸ்திரேலியாவிலும், அமெரிக்காவிலும் சென்று இசை கம்போஸ் செய்து வந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். நல்ல விஷயம்தான் சார்!

English summary
Santhosh Narayanan is gearing up to release an album like Hip Hop Aadhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil