twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காலா ஓபனிங் இசை எப்படி இருக்கணும்? ரசிகர்களிடம் கருத்து கேட்ட இசையமைப்பாளர்!!

    By Shankar
    |

    Recommended Video

    காலா ஓபனிங் இசை எப்படி இருக்கணும்?

    ரஜினியின் காலா படத்துக்கு ஓபனிங் இசை எப்படி இருந்தால் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என யோசித்து வருகிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். இது குறித்து அவர் ரசிகர்களிடமே கருத்தும் கேட்டுள்ளார்.

    ரஜினி படங்களில் அவரது அறிமுகப் பாடல் மிக முக்கியம். கபாலி வரை அவருக்கான அறிமுகப் பாடல்கள் பட்டையைக் கிளப்பும்.

    Santosh Narayanan's special effort for Kaala opening music

    காலா படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து கேட்டு பதிவிட்டுருந்தார் சந்தோஷ் நாராயணன்.

    அதில், "காலா இசை உருவாக்கத்தில் உங்கள் எல்லோரையும் பங்கு பெற வைப்பது என்னுடைய கனவு. காலா படத்தின் அறிமுகப் பாடலுக்கான இசை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள்? உங்களுடைய ஆலோசனையை பாடலில் சேர்ப்பது எனக்குப் பெருமை. மிக்க நன்றி!" எனக் பதிவிட்டு, ரெட்ரோ 80களின் இசை, ஸ்டைலிஷ் 90 - 2000த்தின் இசை, மார்டன் டே எலக்ட்ரோ இசை, மேற்கூறிய அனைத்தும் கலந்து' என மொத்தம் நான்கு ஆப்ஷன்களைக் கொடுத்திருந்தார்.

    ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு வாக்களிக்கத் துவங்கினர். வாக்களிப்பின் முடிவில் "மேற்குறிய அனைத்தும் கலந்து" என்ற ஆப்ஷனுக்கு மக்கள் அதிக வாக்கு அளித்தனர்.

    எனவே காலாவின் அறிமுகப் பாடல் வித்தியாசமாக அனைத்தும் கலந்த கலவையான இசையாக இருக்கும் எனத் தெரிகிறது.

    English summary
    Santosh Narayanan is taking special effort for setting Kaala opening music to satisfy all Rajini fans
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X