»   »  சத்தம் போடாதே-பாடல் விமர்சனம்

சத்தம் போடாதே-பாடல் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளமை பொங்கும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், ஜில்லென்று வந்திருக்கிறது சத்தம் போடாதே படத்தின் பாடல்கள்.

வசந்த் இயக்கத்தில், பிருத்விராஜ், பத்மப்பிரியாவின் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில், நா. முத்துக்குமாரின் பாடல்களில் சத்தம் போடாதே படப் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

வசந்துத்தும், யுவனும் இணைவது இது 2வது முறை. முதல் ஜோடி பூவெல்லாம் கேட்டுப் பார். சத்தம் போடாதே படப் பாடல்கள் சத்தம் போடாமல், இசை ரசிகர்களை தாலாட்டிக் கொண்டிருக்கிறது.

நா. முத்துக்குமாரே படத்தின் அத்தனை பாடல்களையும் எழுதியுள்ளார். கவித்துவம் வாய்ந்த அவரது அழகிய வரிகள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவை.

அழகு குட்டி செல்லம் .. சங்கர் மகாதேவன் வாய்ஸில் அன்பைப் பொழியும் பாடல் பாடல். யுவன் பாணி இளமை இசையும், முத்துக்குமாரின் முறுக்கும் வரிகளும் மென்மை, மென்மை.

ஓ காதல் ... யுவனே பாடியுள்ளார். கூடக் குரல் கொடுத்திருப்பவர் அட்னன் சமி. வெஸ்டர்ன் ராப் வகை பாடலான இதில், அட்னன் குரலே அதிகம் ஒலிக்கிறது. சப்போர்ட்டிவாக குரல் கொடுத்துள்ளார் யுவன். நல்ல ஃப்யூசன் பாட்டுக்கு இதை உதாரணமாகச் சொல்லலாம்.

பேசுகிறேன் .. அதிரடி பாடல்களுக்குப் பெயர் போன விவா கேர்ள்ஸ் குழுவினர் பாடியுள்ள மெலோடி பாடல். ஒரு சினிமா பாடலை, ஒரு இசைக் குழுவினரை வைத்துப் பாட வைத்திருப்பது சினிமா வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை என்று தோன்றுகிறது. பாடலைக் கேட்கவே ஜாலியாக இருக்கிறது.

எந்த குதிரையில் .. சிலிர்க்க வைக்கும் குரலுக்குச் சொந்தமான ஷ்ரியா கோஷலும், ராகுல் நம்பியாரும் பாடியுள்ள இந்தப் பாடல் மெதுவாக ஆரம்பித்து அதிர் வேட்டாக வெடிக்கிறது. இசைப் பிரியர்களுக்குப் பிடித்த மாதிரியான பாடல். மெலடியும், அதிரடியும் கலந்த அற்புதக் கலவையில் யுவன், இளைஞர்களைக் கவருகிறார்.

காதல் பெரியதா .. யுவனுடன், சுதா ரகுநாதன் இணைந்துள்ள முதல் பாடல். வெஸ்டர்ன், ஹஸ்கி பாடலாக சுதா ரகுநாதனை பாட வைத்துள்ளார் யுவன். சும்மா சொல்லக் கூடாது, சுதா ரகுநாதனும் சொக்க வைக்கிறார்.

நல்ல பாட்டு, அழகான மெட்டு, யுவனுக்கு கொடுப்போம் பெரிய ஷொட்டு!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil