»   »  நெஞ்சம் மறப்பதில்லை.. சந்தோஷ் நாராயணன் நீக்கம்... யுவனுடன் கை கோர்க்கும் செல்வராகவன்!

நெஞ்சம் மறப்பதில்லை.. சந்தோஷ் நாராயணன் நீக்கம்... யுவனுடன் கை கோர்க்கும் செல்வராகவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெஞ்சம் மறப்பதில்லை படத்திலிருந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நீக்கப்பட்டதாகவும் அவருக்குப் பதில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

செல்வா - யுவன்

செல்வா - யுவன்

ஒரு காலத்தில் யுவன் சங்கர் ராஜா - செல்வராகவன் கூட்டணி அபார வெற்றிகளைக் குவித்தது. ஆனால் புதுப்பேட்டைக்குப் பிறகு இந்தக் கூட்டணி பிரிந்தது.

மாறிய கூட்டணி

மாறிய கூட்டணி

அதன் பிறகு ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் என வெவ்வேறு இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றினார் செல்வராகவன்.

மீண்டும்

மீண்டும்

சிம்புவை வைத்து தொடங்கப்பட்ட கான் படத்தில் மீண்டும் யுவனும் செல்வாவும் இணைந்தனர். ஆனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.

நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

அடுத்து நெஞ்சம் மறப்பதில்லை என்ற பெயரில் ஒரு த்ரில்லர் படத்தை இயக்குகிறார் செல்வராகவன். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அவர் சந்தோஷ் நாராயணனை ஒப்பந்தம் செய்திருந்தார்.

சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

ஆனால் இப்போது சந்தோஷ் நாராயணன் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் மீண்டும் யுவன் சங்கர் ராஜாவையே இசையமைக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா நாயகனாக நடிக்கிறார். ரெஜினா, நந்திதா நாயகிகளாக நடிக்கின்றனர். பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

English summary
Selvaraghavan has replaced Santhosh Narayanan with his lucky Yuvan Shankar Raja in his upcoming horror thriller Nenjam Marapadhillai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil