For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் சிம்டாங்காரன்.. வெளியானது சர்கார் சிங்கிள் டிராக்

  |
  சிம்டாங்காரன் சுவாரஸ்சியங்கள்- வீடியோ

  சென்னை: சர்க்கார் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

  மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சர்க்கார் திரைப்படத்தின் சிங்கிள் டிராக்கான சிம்டாங்காரன் பாடல் வெளியாகியுள்ளது.

  ஏஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜய்க்காக விவேக் பாடல் எழுதுகிறார் என்றதுமே எதிர்பார்ப்பு இரட்டிப்பானது. உலக அளவில் ஹிட் அடித்த ஆளப்போறான் தமிழன் கூட்டணியில் வரக்கூடிய அடுத்த பாடல் என்பதால் இத்தனை எதிர்பார்ப்பு.

  Simtaangaran song review!

  பற்றாக்குறைக்கு சிம்டாங்காரன் என்ற புதிய வார்த்தையை ட்ரெண்டாக்கி, அதற்கு என்ன அர்த்தம் என ஒரு சுத்து சுத்திவிட்டு, பிறகு பாடலாசிரியர் விவேக்கே அதற்கு விளக்கமளித்தார். கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் இப்படி சொல்லலாம் என்றும், இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கண் சிமிட்டாமல் ஒருவரை பார்க்க தோனுமே அந்த ஒருவன் தான் சிம்டாங்காரன் என விளக்கமளித்தார்.

  ஏற்கனவே கொண்டாட்டத்தின் உச்சியில் இருந்த ரசிகர்கள், இந்த "சிம்டாங்காரன்" என்ற வார்த்தை அப்படியே தளபதி விஜய்யை குறிப்பிடுவதாக உள்ளதே என விவேக்கை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். சரி இப்போது பாடலுக்கு வருவோம்.

  சிம்டாங்காரன் பாடல் சன் நெஸ்ட் ஆப்பில் வெளியாகியுள்ளது. ஒரே நேரத்தில் கோடிக்கணக்கானோர் பார்ப்பதனால், சன் நெக்ஸ்ட் ஆப்பே ஸ்தம்பித்துப் போகியுள்ளது.

  விஜய்யின் மாஸ் இன்னும் பல மடங்கு உயரும் வகையில், ஃபோக் பாடலாக வெளியாகியிருந்தாலும் அது ரஹ்மானின் ஸ்டைலில் உள்ளது. குறிப்பாக இந்த பாடலை விவேக் எழுதினாரா என சந்தேகமும் வருகிறது. அவருக்கு பரிட்சயப்படாத வார்த்தைகள் அதிகம் கையாளப்பட்டுள்ளான.

  "சிம்டான்காரன் சில்பி நிக்க போறேன்" என டெக்னோ பாடல் போல் ஆரம்பிக்கும் பாடல், திடீரென தர லோக்கலுக்கு இறங்குகிறது.

  ஏய் நிக்கலு பிக்கலும்ம்மா... ஓஹ் தொட்டனும் தொக்கலும்மா.., மக்கரு குக்கரும்மா.. அந்தரு பன்னிகினா தா... என்ற வரிகள் பக்கா சென்னை கானாவை ஞாபகப்படுத்துகின்றன.

  "கொக்காலங்கா.. கொக்காலங்கா கொத்த போடு...

  பல்டி பக்குற டர்ல உடனும் பல்த்து.. வேர்ல்டு மொத்தமும் அர்ள உடனும் பிஸ்த்தே..."

  இந்த இரண்டு வரிகளும் வரும்போது எப்படிப்பட்ட கல் நெஞ்சக்காரனாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே ஒரு குத்தாட்டம் போடுவது நிச்சயம்.

  . குறிப்பாக " எகுறு .. அல்லு சில்லி..., எட்டி செதறனும்.. எகுறு அல்லு சில்லு வரிகள் முறுக்கேற்றும் விதத்தில் உள்ளன்.

  மெலடி, கானா, வெஸ்டெர்ன் என இதை எந்த வகையறாக்குள்ளும் அடக்கி விட முடியாத பாடல் இது. ரஹ்மான் தர லோக்கலாக பேட்டை ராப் போட்டுள்ளார். பல ஸ்டைலிஷ் பாடல்களையும் மெலடி பாடல்களையும் கொடுத்துள்ளார். ஆனால் இதுபோன்ற ஒரு பாடலை இதுவரை கொடுத்ததில்லை. இது எல்லாம் சேர்ந்த கலவை என்பதை விட அதற்கும் மேல் என்று சொல்லலாம்.

  சிம்டாங்காரன் நிச்சயம் ஹிட் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.

  English summary
  Sarkar movie single track, Simtaangaran has been released. Definitely it will be hit number.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X