»   »  வடசென்னைவாசியாக கலக்கும் விக்ரம்... 'ஸ்கெட்ச்' லிரிக்கல் வீடியோக்கள் ரிலீஸ்!

வடசென்னைவாசியாக கலக்கும் விக்ரம்... 'ஸ்கெட்ச்' லிரிக்கல் வீடியோக்கள் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் விக்ரம் 'இருமுகன்' படத்திற்கு பிறகு 'துருவ நட்சத்திரம்', 'ஸ்கெட்ச்', 'சாமி 2' ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.

விக்ரம் நடித்திருக்கும் இந்த மூன்று படங்களுமே அடுத்த வருடம் வெளியாகும் நிலையில் தான் உள்ளன.

இவற்றில் விக்ரம் வடசென்னைவாசியாக நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' படம் முதலில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

ஸ்கெட்ச் இசை

ஸ்கெட்ச் இசை

விக்ரம் ஜோடியாக தமன்னா நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படத்தை விஜய் சந்தர் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.'ஸ்கெட்ச்' படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றன.

ஸ்கெட்ச் பாடல்கள்

ஸ்கெட்ச் பாடல்கள்

'அட்சி புட்சி ஸ்கெட்ச்', 'சீனி சில்லாலே..', 'கனவே கனவே...' ஆகிய பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 'ஸ்கெட்ச்' படத்தின் 'அட்சி புட்சி ஸ்கெட்ச்' சிங்கிள் ட்ராக் கடந்த டிசம்பர் 25-ம் தேதி ரிலீஸ் ஆனது.

விக்ரம் தமன்னா

விக்ரம் தமன்னா

விக்ரம் - தமன்னா ஆகிய இருவரும் செம ஸ்டைலிஷாக 'ஸ்கெட்ச்' படத்தில் நடித்திருக்கிறார்கள். 'ஜெமினி' படத்தில் பார்த்த பழைய கெத்தான விக்ரமை இந்தப் படத்தில் நாம் பார்க்கலாம். சூரியோடு இணைந்த விக்ரமுக்கு செமயாக காமெடி பிக்கப் ஆகியிருக்கிறதாம்.

விக்ரம் ரசிகர்கள்

விக்ரம் ரசிகர்கள்

'ஸ்கெட்ச்' படத்தின் பாடல்கள் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. செம ஸ்டைலாக விக்ரம் நடித்திருக்கும் 'ஸ்கெட்ச்' படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

English summary
Vikram's 'Sketch' movie will be released soon. Vijay Chander has directed 'Sketch' lead by Vikram and Tamannaah. Thaman has composed music for this movie. Lyrical videos of 'Sketch' songs are officially released.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X