»   »  என்ன “வெங்காயத்துக்கு” பாட்டெழுதணும்?... ஆடியோ ரிலீசில் "ஆங்ரி பேர்டான" சிநேகன்!

என்ன “வெங்காயத்துக்கு” பாட்டெழுதணும்?... ஆடியோ ரிலீசில் "ஆங்ரி பேர்டான" சிநேகன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய பாடலாசிரியர்களில் சிலர் எழுதும் பாடல் வரிகள் என்ன என்றே புரிவதில்லை. அப்படி புரியாத பாடல்களை என்ன வெங்காயத்துக்கு எழுத வேண்டும். ஆங்கிலம், வேற மொழிவார்த்தைகள் கலந்து புரியாத பாடல்களை எழுதுவதை விட்டுவிட்டு நம் தமிழ்மொழியில் எழுதுங்கள்' என களவு செய்யப் போறோம் பட ஆடியோ ரிலீசில் கோபமுடன் பேசியுள்ளார் கவிஞர் சிநேகன்.

கவிஞராக மட்டுமின்றி நடிகராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் சிநேகன். யோகி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், உயர்திரு 420 என்ற படத்தில் கதாநாயகனாக உயர்ந்தார். அதன் பிறகு தற்போது இராஜராஜ சோழனின் போர்வாள், பொம்மிவீரன் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஏ.என்.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.டி.குணசேகர் இயக்கியுள்ள களவு செய்யபோறோம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், கவிஞர் சிநேகன், இயக்குநரும் நடிகருமான சந்தானபாரதி, நடிகர்கள் நிதின் சத்யா, பவர் ஸ்டார், மகாநதிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது விழாவில் சிநேகன் பேசியதாவது:-

வாழ்த்துக்கள்...

வாழ்த்துக்கள்...

களவுசெய்ய போறோம் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். இந்தபடத்தின் இசையமைப்பாளர் வி.தஷி எனக்கு 20 ஆண்டு கால நண்பர். படத்தின் தயாரிப்பாளர் மற்றும்நாயகர்களில் ஒருவரான சலீம் எனக்கு ஏற்கனவே தெரிந்த நண்பர். அவர்களுக்கும்படக்குழுவினருக்கும் மீண்டும் என் வாழ்த்துக்கள்.

அறிமுக பாடலாசிரியர்...

அறிமுக பாடலாசிரியர்...

இந்தப் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகம் ஆகும் பாடலாசிரியர் கவிதாவுக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தின் பாடல்கள் வார்த்தைகள் புரியும்படியாக பாடலாசிரியர்கள் எழுதியுள்ளனர். அந்தவார்த்தைகள் கேட்கும் படி இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார்.

வரிகளே புரிவதில்லை...

வரிகளே புரிவதில்லை...

ஆனால் இன்றைய பாடலாசிரியர்களில் சிலர் எழுதும் பாடல் வரிகள் என்ன என்றே புரிவதில்லை.வரிகளும் வார்த்தைகளும் புரிந்தால் தானே, அந்த வார்த்தைகள் கேட்கும்படி இசையமைக்க முடியும்.

தமிழ் மொழியில் எழுதுங்கள்...

தமிழ் மொழியில் எழுதுங்கள்...

அப்படி புரியாத பாடல்களை என்ன வெங்காயத்துக்கு எழுத வேண்டும். ஆங்கிலம், வேற மொழிவார்த்தைகள் கலந்து புரியாத பாடல்களை எழுதுவதை விட்டுவிட்டு நம் தமிழ்மொழியில் எழுதுங்கள். அதையும் புரியும்படி எழுதுங்கள் என்று பாய்ந்தார்.

பொன்னாடை வேண்டாம்...

பொன்னாடை வேண்டாம்...

மேலும் சினிமா விழா மேடைகளில் தயவுசெய்து பொன்னாடை போர்த்தாதீர்கள். அதற்கு பதிலாககலந்து கொள்ளும் பெண்களுக்கு சேலையும் ஆண்களுக்கு வேட்டியும் அன்பளிப்பாக தாருங்கள்.வேட்டியும் சேலையும் நம் கலாச்சாலம். அதை வளர்ப்போம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பீப் பாடல்...

பீப் பாடல்...

முன்னர் ஒய் திஸ் கொலைவெறி பாடலும், தற்போது பீப் பாடலும் பெரும் பிரச்சினைகளை சந்தித்த நிலையில், சிநேகனின் இந்தப் பேச்சு தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The Tamil lyricist and actor Snehan has condemned other lyricist for not writing songs in pure Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil