»   »  இளையராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி - எஸ்.பி.பி மிஸ்ஸிங்!

இளையராஜாவின் பிரமாண்ட இசைக்கச்சேரி - எஸ்.பி.பி மிஸ்ஸிங்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : இசைஞானி இளையராஜாவிற்கு தமிழ்நாட்டைப்போலவே ஆந்திராவிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போதும் அவர் தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில், ஐதராபாத்தில் ஒரு பிரமாண்ட லைவ் இசை நிகழ்ச்சி நடத்தப்போவதாக கூறியிருந்த இளையராஜா, நேற்று அந்த நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.பி கலந்துகொள்ளவில்லை.

சுமார் 40 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த இசை நிகழ்ச்சியில் தெலுங்கில் தனது இசையில் உருவான ஹிட் பாடல்களாக பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார் இளையராஜா.

இளையராஜா இசை

இளையராஜா இசை

தற்போது கமலின் 'சபாஷ்நாயுடு', 'மேற்கு தொடர்ச்சி மலை', 'நாச்சியார்', 'அம்மாயி', 'களத்தூர் கிராமம்' உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா. தனது மூத்த மகன் கார்த்திக் ராஜாவுடன் இணைந்து அவ்வப்போது வெளிநாடுகளிலும் கச்சேரிகள் நடத்தி வரும் இளையராஜா, நேற்று ஐதராபாத்தில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

சிரஞ்சீவி பங்கேற்பு

சிரஞ்சீவி பங்கேற்பு

இந்த இசை நிகழ்ச்சிக்காக ஹங்கேரியில் இருந்து 85 இசைக்கலைஞர்களை வரவைத்திருக்கிறார் இளையராஜா. மேலும், இந்த இசை நிகழ்ச்சியில் தெலுங்கு திரைப்பட நடிகர் நடிகைகள் மட்டுமன்றி சிரஞ்சீவி உள்ளிட்ட சில அரசியல் பிரபலங்களும் கலந்து கொண்டு இளையராஜாவின் பாடல்களை ரசித்துள்ளனர்.

 மனோ, சித்ரா

மனோ, சித்ரா

தான் மட்டுமின்றி தனது இசையில் பாடல்கள் பாடிய மற்ற பாடகர், பாடகிகளையும் இந்த நிகழ்ச்சியில் பாட வைத்தார் இளையராஜா. கே.எஸ்.சித்ரா, மனோ, சாதனா சர்கம், கார்த்திக், விஜய் பிரகாஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் லைவ்வாக பாடி இசை ரசிகர்களை மகிழ்வித்தனர்.

எஸ்.பி.பி வரவில்லை

எஸ்.பி.பி வரவில்லை

இளையராஜாவின் இசையில் தெலுங்கில் அதிகப்படியான ஹிட் பாடல்களை பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான். ஆனால், பாடல்கள் மட்டுமே பாடப்பட்ட இசைக்கச்சேரியில் எஸ்.பி.பி பங்கேற்கவில்லை. பாடல்களுக்குப் பின்னால் இருக்கும் சுவாரஸ்யமான கதைகளையும் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார் இளையராஜா.

ராயல்டி கேட்ட விவகாரம்

ராயல்டி கேட்ட விவகாரம்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனது 50 ஆண்டு திரையிசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், வெளிநாடுகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கச்சேரிகள் நடத்தி வந்தபோது, தனது இசையில் உருவான பாடல்களை மேடைகளில் பாட ராயல்டி கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார் இளையராஜா.ராயல்டி விவகாரத்துக்குப் பிறகு இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய இருவரும் இதுவரை படங்களிலோ அல்லது கச்சேரிகளிலோ இணையவில்லை.

English summary
Ilayaraja has a number of fans in Telugu as well as Tamil. He is still composing music for Telugu films. Ilayaraja, who has said that he will hold a grand live concert in Hyderabad, has held the show yesterday. SP Balasubramiyam did not attend this event.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X