»   »  'அட உன்னைப் போல் நடிகன் யாரு.. நீ நடந்தாலே ஆஸ்கார் பாரு...'- ரஜினிக்காக ஒரு பாட்டு!

'அட உன்னைப் போல் நடிகன் யாரு.. நீ நடந்தாலே ஆஸ்கார் பாரு...'- ரஜினிக்காக ஒரு பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் காதல் சுகுமார் இயக்கும் இரண்டாவது படமான 'சும்மாவே ஆடுவோம்' குழுவுக்கும் கபாலி ஃபீவர்.

இவர்கள் ரஜினிக்காக உருவாக்கிய பாட்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாடலாசிரியர் முருகன் மந்திரம் எழுதி, குத்துப் பாட்டு ஸ்பெஷலிஸ்ட் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்தப் பாடலை, 'தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்த ரஜினிக்கான எங்களின் மரியாதை' என்று அர்ப்பணித்துள்ளனர்.

Summave Aaduvom dedicates a song for Rajini

அந்தப் பாடல் மற்றும் வீடியோ...

தலைவா...
தலைவா...
தல..தல..
தலைவா..
என் தலைவன் நீ தான்
என் உயிரும் நீ தான்

மாதா பிதா குரு தெயவம்
எல்லாம் எனக்கு நீயே தான்..
உன் ரசிகன் நான்தான்
உன்னைப்போல் நான்தான்
ஒரு வார்த்தை நீ சொன்னா
உயிரை உனக்கு தருவேன் நான்..

அட உன்னைப் போல்
நடிகன் யாரு..
நீ நடந்தாலே
ஆஸ்கார் பாரு...

அட உன்னைப் போல்
மனிதன் யாரு..
நீ அன்பாலே இறைவன்
பாரு...

என் தலைவன் நீதான்
என் உயிரும் நீதான்
மாதா பிதா குரு தெய்வம் எல்லாம் எனக்கு நீயே தான்

ஓன் ரசிகன் நான் தான்
ஒன்னைப்போல நான் தான்
ஒரு வார்த்தை நீ சொன்னா
உயிரை உனக்கு தருவேன் நான்,,,

அட உன்னைப்போல் நடிகன் யாரு
நீ நடந்தாலே ஆஸ்கார் பாரு
அட உன்னைப்போல் மனிதன் யாரு
நீ அன்பாலே இறைவன் பாரு

சரணம் -1

என்னைப்போல ரசிகன் எத்தனையோ கோடி
அன்பால தான் சேர்ந்தான் உன்னை தினம் தேடி

எத்தனையோ நடிகன் நித்த நித்தம் வருவான்
என் தலைவன் இடத்தை யாரு இங்கே பிடிப்பான்

பதினாறு மாச பச்சப்புள்ள ரசிக்கும்
பதினெட்டு வயசு குமரிப்புள்ள ரசிக்கும்
உழைக்கின்ற மனசு உண்மையாக ரசிக்கும்
உயர்படிப்பு படிக்கும் கூட்டம் உன்னை ரசிக்கும்

பல கோட்டைகளும் உனக்கு காத்திருக்குமே
நீ கொடியை ஏத்தும் நாளை பாத்திருக்குமே

அட ஆனா.... ஓன் மனசு...
அந்த ஆண்டவனைத் தேடும்....

சரணம் 2

என் ரசிகன் தானே என்னை வாழ வைக்கும் தெய்வம்...
அவனுக்காக வாழும் வாழ்க்கைய நான் கேட்பேன்

இது அன்னைத் தமிழ் நாடு... எங்க அம்மாவோட வீடு...
என் தாயின்மொழிய காக்க... என் உயிரையும் நான் தருவேன்

அட ஆஸ்காரு எல்லாம் தேவையில்ல நமக்கு
என் அன்பான ரசிகன் நீ போதும் எனக்கு
நீ அம்மாவை நேசி.... அப்பாவை நேசி
நீ நன்றாகப் படிச்சி முன்னேறி வா நீ

அந்த ஆண்டவனே சொன்னா, நான் அப்ப வருவேன்..
அட நாற்காலியே வேண்டாம் நான் நன்மை செய்யுவேன்...

என் வழி தான்....
தனி வழி தான்....
அந்த ஆண்டவனின் வழி தான்...

இந்தப் படத்திலும் இடம்பெறுகிறதாம். மெட்டும் இசையும் செம குத்தாட்டப் பாட்டாக உள்ளதால் ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

English summary
The Crew of Kadhal Sugumar's Summave Aaduvom has dedicated a kuthu number for Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil