»   »  அஜித்தின் 'சர்வைவா' வேற லெவல்... முழுப் பாடலும் வெளியானது! #Surviva

அஜித்தின் 'சர்வைவா' வேற லெவல்... முழுப் பாடலும் வெளியானது! #Surviva

Posted By:
Subscribe to Oneindia Tamil

அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் சர்வைவா முழுப் பாடலும் நேற்று மாலை வெளியானது.

பாடலைக் கேட்ட பலரும் 'இது வேற லெவல்' எனப் பாராட்டி வருகின்றனர்.


சமூக வலைத்தளங்களில் நேற்று மாலை முதலே ட்ரென்டிங்கில் இருந்து வருகிறது இந்தப் பாடல்.


பாடல்களுக்கு முக்கியத்துவம்

பாடல்களுக்கு முக்கியத்துவம்

சமீப ஆண்டுகளில் வெளியான அஜித் படங்களில் மங்காத்தாவுக்குப் பிறகு வேறு படங்களில் பாடல்கள் பெரிதாக கவனிக்கப்படவில்லை. ஆக்ஷனுக்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து படமெடுத்து வந்தார்கள். ஆனால் விவேகம் படத்தின் பாடல்கள் பெரிதாகப் பேசப்பட வேண்டும் என அக்கறை காட்டி வருகின்றனர்.


சர்வைவா டீசர்

சர்வைவா டீசர்

அனிருத் இசையில் விவேகத்துக்காக ஏழு பாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் முதல் பாடல் சர்வைவா. இதனை முதலில் ஒரு டீசராக 5 நாட்களுக்கு முன் வெளியிட்டனர்.


சாவனில் வெளியீடு

சாவனில் வெளியீடு

சர்வைவா பாடலின் முழு வடிவமும் நேற்று மாலை 6 மணிக்கு சாவன் (Saavn ) என்ற இணைய இசை செயலியில் வெளியானது. அஜித் போன்ற ஒரு பிரபல நடிகரின் படப் பாடல் ஒன்று இந்த தளத்தில் வெளியிடப்படுவது இதுதான் முதல் முறை.


யோகி பி

யோகி பி

இந்தப் பாடலை அனிருத்துடன் இணைந்து யோகி பி பாடியுள்ளார். பாடலை யோகி பியும் மாலி மனோஜும் எழுதியுள்ளனர்.


பெரும் வரவேற்பு

பெரும் வரவேற்பு

ஹாலிவுட் பாணியில் துள்ளல் இசைப் பாடலாக சர்வைவா உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தலைமுறை இளைஞர்களின் விருப்பப் பாடலாக அமைந்துள்ளதால் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


ட்ரென்டிங்

பாடல் வெளியான சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் அதை தரவிறக்கம் செய்து ரசித்துள்ளனர். ட்விட்டரில் நேற்றிலிருந்து ட்ரென்டிங்கில் உள்ளது இந்தப் பாடல். ஐட்யூனிலும் அதிகம் பேர் விரும்பிக் கேட்டுள்ளனர்.


அனைத்துப் பாடல்களும்

அனைத்துப் பாடல்களும்

விவேகம் படத்தின் மற்ற ஆறு பாடல்களும் ஜூலை 27-ம் தேதி பாடல்கள் வெளியாகிறது.


English summary
The full version of Surviva song from Ajith's Vivegam has been released in Saavn streaming platform on Monday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos