»   »  இமானுக்குப் போட்டி நீங்கதான்!- புது இசையமைப்பாளர் இஷான் தேவைப் பாராட்டிய தாணு!

இமானுக்குப் போட்டி நீங்கதான்!- புது இசையமைப்பாளர் இஷான் தேவைப் பாராட்டிய தாணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கும் இன்னொரு இளமை புதுமை இசையமைப்பாளர் இஷான் தேவ். சமீபத்தில் இஷான் தேவ் இசையில் வெளியான சாரல் திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியிலும் சினிமாத்துறையினர் மத்தியிலம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.

சாரல் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள, "என்ன செஞ்ச புள்ள" பாடலும், "கண்ணாலத் தாக்குற" பாடலும் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு இளமையான மென்மையான திறமையான இசையமைப்பாளர் கிடைத்திருப்பதை உறுதி செய்திருக்கிறது.

Thaanu praises new music director Ishan Dev

சமீபத்தில் இஷான் தேவ்-ன் மியூசிக் ஐடி ஸ்டுடியோவிற்கு வருகை தந்திருந்தார், தமிழ் சினிமாவின் பிரமாண்ட தயாரிப்பாளர் தாணு.

அமைதிப்படை பார்ட் 2, கங்காரு, படங்களின் தயாரிப்பாளரும் திருப்பதி லட்டு படத்தின் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி, தான் இயக்கும் திருப்பதி லட்டு படத்தின் பாடல்களைக் கேட்பதற்காக தாணுவை அழைத்திருந்தார்.

திருப்பதி லட்டு பாடல்களையும் சாரல் படத்தின் பாடல்களையும் கேட்டு ரசித்த தயாரிப்பாளர் தாணு, நீண்ட நேரம் இஷான் தேவுடன் இசை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது இஷான் தேவ்-விடம், "உங்களுடைய இசை சிறப்பா இருக்கு. மெலடியா இருக்குது அதே நேரத்தில் பாடல் வரிகள் டிஸ்டர்ப்பே இல்லாமல் தெளிவா கேட்குது, இமானுக்கு போட்டி நீங்கதான்..." என்று பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து இஷான் தேவ், பேசுகையில், "தாணு சார் ஸ்டுடியோவுக்கு வந்து பாடல்கள் கேட்டு பாராட்டுனது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். தாணு சாரோட பாராட்டு என்னோட முதல் பெருமையாக நினைக்கிறேன்.

இப்போ சாரல் பாடல்கள், ரொம்ப மெலடியா கேட்க அழகா இருக்குன்னு சொல்லி நிறைய பேர் பாராட்டினாங்க. அது பெரிய சந்தோஷம். அடுத்து வெளியாகப்போற, பட்டினப்பாக்கம், மற்றும் திருப்பதி லட்டு படங்கள்... சாரல் படத்துக்கு சம்பந்தமில்லாம வேற வேற டைமென்சன்ஸ்ல இருக்கும். கண்டிப்பாக உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

யாருக்கும் தனிப்பட்ட முறையில் நான் போட்டின்னு நான் நெனைக்கல. ஆனா, இன்றைக்கு தமிழில் திறமையான இளைய இசை அமைப்பாளர்கள் இருக்கிறார்கள் அவங்கள்ல ஒருத்தனா இருக்க ஆசைப்படுறேன், அவங்க எல்லாரையுமே எனக்கு போட்டியா நெனைக்கிறேன். என்னோட ஸ்டைல்ல எனக்கு பெஸ்ட்டா அடுத்தடுத்து படங்கள் பண்ணிட்டே இருக்கணும். அதான் என் ஆசை," என்றார்.

English summary
Producer Kalaipuli Thaanu has praised music director Ishan Dev for his tunes in Saaral movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil