»   »  "தல 56" ஓபனிங் சாங் ரெடி… அஜீத் ரசிகர்களுக்கு "பர்த் டே கிப்ட்" கொடுத்த அனிருத்!

"தல 56" ஓபனிங் சாங் ரெடி… அஜீத் ரசிகர்களுக்கு "பர்த் டே கிப்ட்" கொடுத்த அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் என்றாலே அவரது ரசிகர்களுக்கு உற்சாகம்தான் மே தினத்தை தல தினமாக கொண்டாடுகின்றனர் அவரது ரசிகர்கள். மே 1 ஆம் தேதி 44 வது பிறந்தநாளை கொண்டாடும் அஜீத்திற்கு தொலைக்காட்சிகள் பல சிறப்பு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

அஜீத் ரசிகர்களின் உற்சாகத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தல 56 படத்தின் ஓபனிங் பாடலை தயார் செய்து விட்டதாக ட்விட்டியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர். இந்த செய்திக்காக பட்டையை கிளப்பும் வகையில் பதிவிட்டு வருகின்றனர் அஜீத்தின் ரசிகர்கள்.

அஜீத் 56

அஜீத் 56

அஜித்தின் 56வது படத்திற்கு அனிருத் இசை என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இப்படத்தை பற்றி நேற்று டுவிட்டரில் சில கருத்துக்களை அனிருத் தெரிவித்தார்.

தீம் மியூசிக் ரெடி

அஜித் பிறந்தநாளுக்கு தன் வாழ்த்துக்களை கூறிய அனிருத், அஜித்தின் ஓப்பனிங் பாடல் மற்றும் தீம் மியுஸிக் ரெடியாகி விட்டதாக கூறினார்.

பட்டைய கிளப்புங்க

இதை கண்ட அஜீத் ரசிகர்கள் அனைவரும் சந்தோஷத்தில் தங்கள் கருத்துக்களையும், படக்குழுவிற்கு வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர். பட்டைய கிளப்புங்க என்றும், தாரை தப்பட்டை கிழியப்போகுது என்றும் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ரத்த தானம்

அஜீத்தின் பிறந்தநாளுக்கு ரத்ததான முகாம் நடத்தி அசத்தி வருகின்றனர் கோவை ரசிகர்கள்.

வித்யூ லேகா

நடிகை வித்யூ லேகா தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை பிறந்தல நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார். அஜீத்தின் பிறந்தநாளுக்கு திரை உலக நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

English summary
Music director Aniruth tweets for Ajith fans, ‘Thala 56' Theme Music and Introduction song is ready

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil