»   »  ஆதரவற்றோருக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!

ஆதரவற்றோருக்காக இசையமைப்பாளர் தமன் நடத்தும் இசை நிகழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சந்தோஷங்களில் பெரிய சந்தோஷம் அடுத்தவர்களைச் சந்தோஷப்படுத்துவதுதான். அப்படிப்பட்ட ஒரு செயலைச் செய்யப் போகிறது 'ராஜஸ்தான் யூத் அசோசியேஷன் மெட்ரோ' என்கிற சென்னை வாழ் ராஜஸ்தான் இளைஞர் சங்கம் அமைப்பு.

சென்னையின் சுமார் 60 ஆதரவற்றோர் இல்லங்களுக்கு மாதம் தோறும் உணவுக்குத் தேவையான பொருட்களை தங்களது 'புட்பேங்க்' எனப்படும் உணவு வங்கி மூலம் வழங்குவகு இந்த அமைப்புதான்.

Thaman to conduct music for Orphanages

ஒரு முறை ஆயிரம் குழந்தைகளை சிறப்பு ரயில் வாடகைக்குப் பிடித்து திருப்பதிக்கு அழைத்துச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யவைத்து அனைத்து செலவையும் ஏற்றது நினைவிருக்கலாம்.

இன்னொரு முறை 10,000 பேரை கிஷ்கிந்தா அழைத்துச் சென்று ஒரு நாள் முழுக்க அனைத்து விளையாட்டுகளிலும் விளையாட வைத்து களிப்பு மழையில் நனைய வைத்துள்ளனர்.

மற்றொருமுறை 2500பேரை சென்னையில் சர்க்கஸ் பார்க்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

இவ்வாண்டு இப்படி என்ன செய்யப்போகிறார்கள்?

சங்கத்தின் தலைவர் விஜய் கோத்தாரி கூறுகையில், "இவ்வாண்டு இப்படிப்பட்ட ஆதரவற்ற இயலாத குழந்தைகள் 1008 பேரை அழைத்து வந்து அவர்களுக்காக ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறோம். இது நிதிவசூல் நிகழ்ச்சியல்ல. கட்டணம் எதுவும் இல்லை. அவர்களை மகிழ்ச்சியூட்ட மட்டுமே இது நடத்தப்படுகிறது.

இதில் பிரபல இசையமைப்பாளர் எஸ்.எஸ்.தமன் பிரதானமாக கலந்துகொண்டு பாடி குழந்தைகளுக்கு நேரடி இசைநிகழ்ச்சி அனுபவத்தை தர இருக்கிறார். இசைக்குழு ஏர்டெல் சூப்பர் சிங்கர் புகழ் சக்தி அண்ட் சாய் குழுவினர். இசை நிகழ்ச்சியில் கலக்கவுள்ளனர்," என்கிறார்.

இந்நிகழ்ச்சியில் பிரபல இசையமைப்பாளர்களும். திரை நட்சத்திரங்களும் பங்கேற்க இருக்கிறார்களாம்.

English summary
Music director SS Thaman is going to conduct a free music programme for orphanages.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil