»   »  என்ன கொண்டைக்கு லவ் பண்ற: ஒல்லி, வம்பை வச்சு செஞ்ச தமிழ் படம் 2.0 பாடல்

என்ன கொண்டைக்கு லவ் பண்ற: ஒல்லி, வம்பை வச்சு செஞ்ச தமிழ் படம் 2.0 பாடல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
தமிழ் படம் 2.0 பாட்டு ரிலீஸ்!- வீடியோ

சென்னை: தமிழ் படம் 2.0 சிங்கிளை நடிகர் மாதவன் இன்று வெளியிட்டுள்ளார்.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள படம் தமிழ் படம் 2.0 ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்ததுமே ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆவல் வந்துவிட்டது.

இந்நிலையில் மகளிர் தினமான இன்று சிங்கிளை வெளியிட்டுள்ளனர்.

தமிழ் படம் 2.0

இந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படம் என்று சிங்கிள் வீடியோ துவங்குகிறது. சூப் கேர்ள்ஸுக்கான பாடலாம். எவடா எவடா உன்ன பெத்தா கையில் கெடச்சா அவ செத்தா என்று பாடல் துவங்குகிறது.

குரங்கு

குரங்கு

காதலனை நாயே, சனியனே என்றெல்லாம் பாடலில் வசைபாடியுள்ளனர். ஹீரோயின் சரக்கடிக்கும் புகைப்படம் வேறு உள்ளது. திட்டுவது எல்லாம் திட்டிவிட்டு நல்லா இருடா என்ற வாழ்த்துடன் பாடல் முடிகிறது. எல்லா சூப் சாங்குக்கும் பதிலடி கொடுத்துள்ளார் அமுதன்.

அருமை

அருமை

இதற்கு விரல் வித்தை மற்றும் ஒல்லி நடிகர்களை நீங்கள் நேரடியாகவே திட்டியிருக்கலாம் அமுதன் சார் என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

கொண்டை

என்ன கொண்டைக்கு லவ் பண்ற என்ற வரி ரசிகர்களை கவர்ந்துள்ளது. மகளிர் தினத்தன்று சரியான பாடலை வெளியிட்டுள்ளீர்கள் அமுதன் என்று ரசிகர்கள் ட்வீட்டியுள்ளனர்.

English summary
Actor Madhavan has released the single of Thamizh Padam 2.0 on international women's day. Fans are appreciating director CS Amudhan for the perfect women's day gift.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil