»   »  இளையராஜா, ஹாரிஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழாவின் இசை மழையில் நனையத் தயாரா?

இளையராஜா, ஹாரிஸ் மற்றும் ஹிப்ஹாப் தமிழாவின் இசை மழையில் நனையத் தயாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தாரை தப்பட்டை, அரண்மனை 2, கதகளி மற்றும் கெத்து ஆகிய 4 படங்களின் இசை வெளியாகவிருக்கிறது.

ஏற்கனவே கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சூர்யாவின் பசங்க 2, ஜெயம் ரவியின் பூலோகம் மற்றும் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான் ஆகிய படங்கள் வெளியாகின்றன.


அதே போல இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 4 படங்களின் இசை மற்றும் பாடல்களையும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.


தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம் என்ற பெருமையுடன் உருவாகி இருக்கும் தாரை தப்பட்டை படத்தின் இசை வெளியீட்டு விழா 25 ம் தேதி நடைபெறுகிறது. சசிகுமார், வரலட்சுமி இணைந்து நடித்திருக்கும் இப்படம் கரகாட்ட கலையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பண்டிகையில் வெளியாகும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.


கதகளி

கதகளி

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கதகளி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு வருகின்ற 24 ம் தேதி நடைபெறுகிறது. ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. விஷால், கேத்தரின் தெரசா ஆகியோருடன் ரெஜினா இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி மற்றும் பசங்க புரொடக்சன்ஸ் இணைந்து தயாரித்து இருக்கிறது. இதே தினத்தில் தனது பசங்க 2 படமும் வெளியாவதால் டபுள் உற்சாகத்தில் இருக்கிறார் பாண்டிராஜ்.
கெத்து

கெத்து

உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், விக்ராந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கெத்து. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை 25 ம் தேதி வெளியாகிறது. மான்கராத்தே புகழ் திருக்குமரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் முதன்முறையாக ஆக்ஷன் பாதைக்கு மாறியிருக்கிறார் உதயநிதி.
அரண்மனை 2

அரண்மனை 2

சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் அரண்மனை 2 படத்தில் சித்தார்த், ஹன்சிகா, த்ரிஷா மற்றும் பாளர் நடித்திருக்கின்றனர். அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் 25 ம் தேதி வெளியாகிறது.கதகளி படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா தான் இப்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார்.


சுவாரசியங்கள்

சுவாரசியங்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தை ஒட்டி வெளியாகும் இந்த இசை வெளியீட்டில் சில சுவாரசியங்களும் காணக் கிடைக்கின்றன. இந்தப் படங்களில் கதகளி, அரண்மனை 2 மற்றும் தாரை தப்பட்டை ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகின்றன.


4 படங்களில் 2 படங்களுக்கு (அரண்மனை2 மற்றும் கதகளி) இசையமைத்து இருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதே போல பாண்டிராஜின் பசங்க 2 படம் வெளியாகும் அதே நாளில் அவரின் இயக்கத்தில் உருவான கதகளி படத்தின் பாடல்களும் வெளியாகிறது.
English summary
The Following 4 movies Tharai Thappattai, Gethu, Kathakali and Aranmanai 2 Audio Released for Christmas Festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil