»   »  வீரா துறந்தாரா... கபாலியிலும் ‘சொத்தை’ இழந்து நொந்து நூடுல்ஸாகிறார் ரஜினி?

வீரா துறந்தாரா... கபாலியிலும் ‘சொத்தை’ இழந்து நொந்து நூடுல்ஸாகிறார் ரஜினி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படப் பாடல்கள் லிஸ்ட் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு பாடல், ‘வீரா துறந்தாரா..' என ஆரம்பிக்கிறது. இந்தப் பாடலைப் பார்க்கும் போது, ரஜினியின் முந்தைய படங்களில் வரும், அவர் சொத்து முழுவதையும் இழந்து அல்லது தானமாகக் கொடுத்துவிட்டு வரும் பாடல்கள் நினைவுக்கு வருகின்றன.

ரஜினியின் சமீபகால படங்களில் தொடர்ந்து அவர் தனது சொத்து முழுவதையும் சதியால் இழப்பது போலவும், அல்லது தானமாக மற்றவர்களுக்கு கொடுப்பது போலவும் காட்சிகள் தவறாமல் இடம் பெற்று வருகிறது.

அப்போது, சொத்துக்களை இழந்து ரஜினி சோகமாக மக்களிடமிருந்து விடை பெறுவது போலவும் காட்சிகள் வைக்கப்படுகின்றன.

வீரா துறந்தாரா...

வீரா துறந்தாரா...

அந்தவகையில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தில், ‘வீரா துறந்தாரா...' என்ற பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடல் ரஜினி தனது சொத்துக்களை இழக்கும்போது வரும் பாடலாக இருக்கலாம் என்பது ரஜினி ரசிகர்களின் கருத்து.

விடுகதையா இந்த வாழ்க்கை...

விடுகதையா இந்த வாழ்க்கை...

முன்னதாக முத்து, அண்ணாமலை, அருணாச்சலம், சிவாஜி, லிங்கா உள்ளிட்ட ரஜினி படங்களிலும் இதே போன்ற காட்சிகளும், பாடல்களும் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, தான் ரஜினி ரசிகர்களிடையே இந்த யூகம் உருவாகியுள்ளது.

நண்பனின் துரோகம்...

நண்பனின் துரோகம்...

முத்து படத்தில் தம்பியால் சொத்துக்களை இழந்து துறவறம் செல்வார் ரஜினி, அண்ணாமலை படத்திலோ நண்பனால் ஏமாற்றப்பட்டு சொத்துக்களை இழப்பார்.

லிங்கா...

லிங்கா...

இவற்றிலிருந்து வேறுபட்டு அருணாச்சலம் படத்தில் தான் வளர்ப்புப் பிள்ளை என்பதை உணர்ந்து, சொத்துக்களை இழந்து நடுத்தெருவில் நிற்பார். சிவாஜியில் கல்லூரி கட்டுவதற்காக வெளிநாட்டில் சம்பாரித்த பணத்தை இழப்பார். லிங்காவில் மக்களுக்காக அணை கட்டப் போய், சிலரின் சதியால் சொத்துக்களை இழந்து ஊரை விட்டே வெளியேறுவார் ரஜினி.

கபாலிடா...

கபாலிடா...

அந்தவகையில், கபாலி படத்தில் என்ன மாதிரியான சூழ்நிலையில், இந்தப் பாடல் வருகிறது. யாரால் அவர் ஏமாற்றப்படுகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

English summary
The track list of Rajinikanth's "Kabali" has been revealed on Wednesday, June 8. It was directly released online by the makers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil