»   »  ரொமான்டிக் கீதமாகுமா கார்த்தி பட பாடல்? - 'ஒரு வீட்டில்..' ப்ரொமோ ரிலீஸ்

ரொமான்டிக் கீதமாகுமா கார்த்தி பட பாடல்? - 'ஒரு வீட்டில்..' ப்ரொமோ ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கார்த்தி நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் இடம்பெறும் 'ஒரு வீட்டில்...' பாடலின் ப்ரொமோ வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 'சதுரங்க வேட்டை' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங், ஆகியோர் நடித்துவரும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'.

இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். 'சதுரங்க வேட்டை' படத்தில் வித்தியாசமான திரைக்கதை இடம்பெற்றதைப் போலவே 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திலும் வித்தியாசமான திரைக்கதை இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Theeran adhigaaram ondru romantic song promo video

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி ஆகியவை வெளியாகியுள்ளன. இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்ட நிலையில் பாடல்களின் ஒரு நிமிட ப்ரொமோ வீடியோக்கள் இன்று வெளியிடப்பட்டன. இவற்றில் 'ஒரு வீட்டில்' பாடல் ரசிகர்களின் அதிகமான பாராட்டைப் பெற்று வருகிறது.

'ஒரு வீட்டில்' பாடல் ரொமான்டிக் ரசிகர்களின் கீதமாக மாறும் எனத் தெரிகிறது. இப்போது அந்தப் பாடலின் தாக்கம் அதிகமாக இல்லையெனினும் படத்தின் ரிலீஸுக்கு பிறகு நிச்சயமாக கொண்டாடப்படும் என எதிர்பார்க்கலாம். படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

English summary
Karthi starrer 'Theeran Adhigaaram Ondru' promo video of the songs are released officially. This film is to be release on November 11th. 'Oru veettil' romantic song is liked by most of music lovers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X