twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரபு நாட்டு தமிழர்களின் துயரங்களைப் பதிவு செய்யும் 'திருந்துடா காதல் திருடா'

    By Mayura Akilan
    |

    அரபு நாடுகளில் வேலைக்குச் சென்றுள்ள இந்தியர்களின் சிரமங்களை பதிவு செய்துள்ளது திருந்துடா காதல் திருடா திரைப்படம்.

    இந்தப் படத்திற்காக பிரபல பின்னணிப் பாடகர் பிரசன்னா கஜல் பாடல் ஒன்றினைப் பாடியுள்ளார். இதற்காக அவர் 7 மணிநேரங்கள் எடுத்துக்கொண்டாராம்.மலையாளத்தில் 5 படங்களை இயக்கிய அசோக் ஆர்.நாத், தற்போது தமிழில் இயக்கியுள்ள படம் திருந்துடா காதல் திருடா. இதே படத்தையும் மலையாளத்திலும் எடுத்துள்ளார்.

    நியூ டி.வி தயாரித்துள்ள இந்த படத்தில் ஆதில் ஹீரோ, சுதக்ஷனா ஹீரோயின். ஜீபிநைனான். சஜீவ் பாஸ்கர், பிரவீன் ரவிச்சந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனைவரும் வளைகுடா நாடுகளில் வேலை பார்ப்பவர்கள். மலையாள நடிகர் முகேஷ், கொச்சு பிரேமன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

    ஆடியோ வெளியீட்டு விழா

    ஆடியோ வெளியீட்டு விழா

    இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. அப்போது, ஒளிப்பதிவாளர் ராமச்சந்திர பாபு, பாடலாசிரியர் அண்ணாமலை மற்றும் அப்படத்தில் மலையாள டெக்னீஷியன்கள் பலரும் கலந்து கொண்டனர். இயக்குநர் சேரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றார்.

    மூன்று தலைமுறைக் காதல்

    மூன்று தலைமுறைக் காதல்

    அப்போது இயக்குனர் அசோக் ஆர்.நாத் படத்தைப்பற்றி பேசுகையில், இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கிறது. மூன்று தலைமுறை காதலர்களைப்பற்றி கதை பண்ணியிருக்கிறேன் என்றார்.

    வெளிநாட்டு வேலை

    வெளிநாட்டு வேலை

    அதேசமயம், குடும்பத்தைக் காப்பாற்ற வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று அடிமைகள் போன்று நடத்தப்படும் இந்தியர்களின் நிலையையும் சொல்லியிருக்கிறேன். அந்தவகையில், படம் உணர்வுப்பூர்வமாக இருக்கும்.

    கஜல் பாடல்

    கஜல் பாடல்

    மேலும், இந்த படத்தில் ஒரு கஜல் பாடல் உள்ளது. அதை ஹரிஹரனை வைத்து பாட வைக்க நினைத்தோம். ஆனால் அவருக்கு ஒரு பாடல் பாடவே ஒன்றரை லட்சம் வரை கொடுக்க வேண்டும் என்றார்கள். அதோடு, மும்பையில் இருந்து அவர் வந்து செல்ல பிளைட் டிக்கெட், தங்குவதற்கு ஹோட்டல் செலவு, சாப்பாடு செலவு என பட்டியல் போட்டபோது தலைசுற்றியது.

    பிரசன்னா பாடிய பாடல்

    பிரசன்னா பாடிய பாடல்

    அதனால், தமிழ் சினிமாவின் ஹரிஹரன் என்று சொல்லப்படும் பாடகர் பிரசன்னாவை வைத்து அந்த கஜல் பாடலை பாட வைத்தோம். ரொம்ப அற்புதமாக பாடினார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் நன்றாக வரவேண்டும் என்று அந்த ஒரு பாடலை பாட அவர் 7 மணி நேரம் எடுத்துக்கொண்டார். அதனால் அந்த பாடலும் அருமையாக வந்திருக்கிறது.

    ரசிகர்களைக் கவரும்

    ரசிகர்களைக் கவரும்

    தமிழ் சினிமாவில் கஜல் பாடல்கள் இதுவரை ஹிட்டாகவில்லை என்றாலும், இந்த பாடல் கண்டிப்பாக ரசிகர்களை கவரும். அந்த அளவுக்கு ரசித்து ருசித்து பாடியிருக்கிறார் பிரசன்னா என்றார்.

    வெளிநாட்டவர்கள் கூட்டணி

    வெளிநாட்டவர்கள் கூட்டணி

    வெளிநாட்டில் வசிப்பவர்கள் கூட்டணி அமைத்து தமிழ் படங்களை அங்கே உருவாக்குது அதிகரித்துள்ளது. அந்த வரிசையில் வருகிறது திருந்துடா காதல் திருடா.

    சிரமத்தில் தவிக்கும் இந்தியர்கள்

    சிரமத்தில் தவிக்கும் இந்தியர்கள்

    அரபு நாடுகளில் வாழும் இந்திய மக்கள் குறிப்பாக தமிழக. கேரள மக்கள் அங்கு சொகுசாக இருப்பதாக நினைக்கிறார்கள். சிலர்தான் அப்படி இருக்கிறார்கள். பெரும்பாலோனார் கஷ்டநிலையில்தான் இருக்கிறார்கள். அந்த உண்மையை ஒரு காதலின் வழியாக இந்தப் படம் பதிவு செய்கிறது.

    அரபு நாடுகளில்

    அரபு நாடுகளில்

    தப்பான காதல் கொள்ளும் ஒருவன் திருந்துவது காதல் கதையின் சாராம்சம். அரபு நாடுகளான துபாய், ஷார்ஜா, அலைன், ராசல்கைமா, அஜ்மான், உமல்-குவைன், யூஜோரா மாநிலங்களில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம். தமிழ், மலையாள மொழிகளில் தயாராகியுள்ளது என்றார்.

    தலைப்பு சரியில்லையே

    தலைப்பு சரியில்லையே

    விழாவில் பேசிய சேரன், கதை அருமையாக இருக்கிறது. ஆனால் தலைப்பு சரியில்லையே என்றார். வெளிநாடுகளில் போய் தவிக்கும் தமிழர்களின் நிலையில் படத்தின் பாடல் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.தமிழ் தெரிந்த நாயகி தமிழ் தெரிந்த நாயகி ஒருவர் மலையாளம், தமிழ் படத்தில் நடிப்பது மகிழ்ச்சி என்றார். ஆனால் அவர் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில் பேசுவதுதான் கொஞ்சம் சிரமமாக இருக்கிறது என்றார் சேரன்.நேரடியாக பார்த்தேன்துபாயில் படும் சிரமத்தை நான் நேரடியாக பார்த்து அனுபவித்தவன் என்று கூறினார். நான் அதை பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தேன். இது இந்தப் படத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெரும் நம்பிக்கை இருக்கிறது என்றும் சேரன் வாழ்த்தினார்.

    English summary
    Tirunthuda Kadal Tiruda Audio launch at Prasath lab in Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X