»   »  வண்ணமயமாக நடந்த கமலின் உத்தம வில்லன் இசை வெளியீடு!

வண்ணமயமாக நடந்த கமலின் உத்தம வில்லன் இசை வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் கமல் ஹாஸனின் அடுத்த வெளியீடான உத்தம வில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று மாலை நடந்தது.

இந்த விழாவில் கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர், ஏராளமான திரையுல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.


பார்த்திபன்

பார்த்திபன்

இவ்விழாவை இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார். இந்தப் படத்தில் மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.


கமல் பற்றி கேபி

கமல் பற்றி கேபி

கமலைப் பற்றி பாலச்சந்தர் பேசிய ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது. பின்னர் கமல் தனது குருநாதர் இயக்குனர் சிகரத்தை பற்றி உருக்கமாக பேசிய ஒலிநாடா ஒலிபரப்பப்பட்டது. தன் கதாபாத்திரத்தை பற்றி இயக்குனர் சிகரம் பேசும் கானொளி காண்பிக்கப்பட்டது.


பூஜா குமார் நடனம்

பூஜா குமார் நடனம்

இப்படத்தின் நாயகி பூஜா குமாரின் நடன நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நடிகர் நாசர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் தங்களது உத்தமவில்லன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.


கமல் பாடல்களுக்கு நடனம்

கமல் பாடல்களுக்கு நடனம்

கமலின் பிரபல பாடல்களுக்கு நடனக் குழுவினர் நடனமும் அதையடுத்து இப்படத்தின் டிரைலரும் ஒளிபரப்பப்பட்டது. படத்தில் நடித்தவர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜிப்ரான், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேகா ஆகியோர் படத்தின் பணியாற்றியது குறித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.


லிங்குசாமி

லிங்குசாமி

தயாரிப்பாளர் லிங்குசாமி பேசும்போது, திருப்பதி பிரதர்ஸ் மூலம் உத்தம வில்லன் படத்தை தயாரித்திருப்பது எங்களுக்கு பெருமை என்று கூறினார். இப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று இயக்குநர் ரமேஷ் அர்விந்த் கூறினார்.


English summary
Kamal Hassan's magnum opus Uthama Villai audio launch was held on Sunday at Chennai Trade Center.
Please Wait while comments are loading...